இந்திய பெருங்கலகம் 1857 – தொடக்கம், தோல்வி மற்றும் விளைவுகள்

  • இந்திய பெருங்கலகம் 1857 என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

கலகம் தொடங்கியது

  • புரட்சியானது மார்ச் 29, 1857ல் 34வது படைப்பிரிவைச் சேர்ந்த மங்கல் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய் கல்கத்தாவிற்கு அருகே பாரக்பூரில் தனது அதிகாரியை சுட்டபொழுது சிறு கலகமாகத் தொடங்கியது.
  • மங்கல் பாண்டே கொலை செய்யப்பட்டு பாரக்பூர் காலாட்படை கலைக்கப்பட்டது. இதைப் பின்பற்றி சிப்பாய்கள் சிறு சிறு கலகங்களில் ஈடுபட்டனர்.
  • மே 9ல் 85 சிப்பாய்கள் துப்பாக்கியை உபயோகிக்க மறுத்ததால், 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு மீரட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
  • மே 10ல் மூன்றாவது குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டு மீரட் சிறையில் அடைக்கப்பட்ட சிப்பாய்களை விடுதலை செய்தனர்.
  • இவர்களோடு 11 மற்றும் 20ஆவது காலாட் படை பிரிவினர் சேர்ந்து கொண்டு சில ஆங்கில அதிகாரிகளைக் கொன்ற பின்பு டெல்லியை நோக்கிச் சென்றனர்.
  • மே 11ல் டெல்லியை அடைந்த அவர்கள் அதிகாரிகளைக் கொன்று இரண்டாம் பகதூர் ஷாவை இந்தியப் பேரரசராக(ஷாகின் ஷா-இ-இந்துஸ்தான்) அறிவித்தனர்.
  • பகதூர்ஷா மற்ற அரசர்களுக்கு கலகத்தில் இணைந்துகொள்ள கடிதம் எழுதினார்.
  • விரைவில் கலகமானது வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளான லக்னோ,
  • அலகாபாத், கான்பூர், வாரனாசி, பீகார், ஜான்சி மற்றும் பிறப்பகுதிகளுக்கும் பரவியது.
  • சிப்பாய்களோடு பொதுமக்கள் கோடாரி, அம்பு போன்றவற்றுடன் கலந்துகொண்டனர்.
  • பல ஜமீன்தார்களும், தாலுக்தார்களும் கலகத்தில் இணைந்து கொண்டதோடு உணவு,
  • பணம் மற்றும் ஆயுதங்களை அளித்தனர்.

கலகத்தை ஒடுக்குதல்

டெல்லி

  • டெல்லியில் இரண்டாம் பகதூர்ஷா பெயரளவில் தலைவராக இருந்தாலும் அதிகாரம் அனைத்தும் ஜெனரல் பகத்கானிடமே இருந்தது.
  • செப்டம்பர் 20, 1857ல் ஜெனரல் நிக்கோல்சன் என்பவரால் டெல்லி மீண்டும் ஆங்கிலேயர் வசமானது.
  • இரண்டாம் பகதூர்ஷா கைது செய்யப்பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1862ல் மரணமடைந்தார்.
  • இதன் காரணமாக முகலாயப் பேரரசு இந்தியாவில் முடிவுக்கு வந்தது.
  • ஜெனரல் பகத்கான் லக்னோவிற்குச் சென்று கலகத்தில் ஈடுபட்டு மே 3, 1859ல் மரணமடைந்தார்.

கான்பூர்

  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்து பையன் நானாசாகிப்பிற்கு பேஷ்வா பட்டம், ஓய்வூதியம் மறுக்கப்பட்டதோடு பூனாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டதால் இக்கலகத்தில் கலந்து கொண்டார்.
  • இவர் இரண்டாம் பகதூர்ஷாவைப் பேரரசராக ஏற்றுக் கொண்டதோடு தன்னை பேஷ்வாவாக அறிவித்துக் கொண்டார்.
  • கான்பூரில் ஆங்கிலேய பெண்கள், குழந்தைகள் மற்றும் அரசு அதிகாரிகளை கொலை செய்தார். இது கான்பூர் படுகொலை என அழைக்கப்பட்டது.
  • இதற்கடுத்தநாள் நானாசாகிப், கேப்டன் ஹென்றி ஹேவ்லாக் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
  • ஜேம்ஸ் நீல் எனும் ஆங்கிலேய கர்னல் கான்பூர் படுகொலைக்கு பழிவாங்க பலரைக் கொடூரமாகக் கொலை செய்தார்.
  • நானாசாகிப் வங்கத்திற்கு தப்பிச் சென்றார். நவம்பர் மாதம் தாந்தியாதோப் கான்பூரைக் கைப்பற்றியபோதும் விரைவில் கேம்பல் என்பவரால் ஆங்கிலேயர் வசம் சென்றது.

ஜேம்ஸ் நீல் சிலை சத்தியாகிரகம்

  • 1857 ல் லக்னோவில் கொலை செய்யப்பட்டார்.
  • அவரின் சேவையை பாராட்டி சென்னை மவுண்ட் ரோட்டில் அவருக்கு பிரிட்டீஸ் அரசு சிலை வைத்தது.
  • 1927ல் சென்னை மகாஜன சபையும், சென்னை மாநில தேசிய காங்கிரஸ் குழுவும் இச்சிலையை அகற்றும் அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த சத்தியாகிரகத்திற்கு முதலில் தலைமை தாங்கியவர் S.N. சோமையா ஜுலு அவரின் கைதிற்கு பின் காமராஜர் தலைமையேற்றார்.
  • சென்னை வந்தபொழுது இச்சத்தியாகிரகத்திற்கு காந்தியடிகள் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
  • சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்திற்காக இச்சத்தியாகிரகம் கைவிடப்பட்டது.
  • இச்சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட முதல் பெண் அஞ்சலையம்மாள் ஆவார்.
  • இச்சிலை 1937ல் சி. இராஜாஜி முதல்வரான பின் அகற்றப்பட்டது.

அயோத்தி அல்லது லக்னோ

  • குடியானவர்களும் தாலுக்தார்களும் அதிக அளவில் பங்கேற்றதால் இக்கிளர்ச்சி வெகுநாள் நீடித்தது.
  • இக்கலகத்திற்கு நவாப் வாஜித் அலியின் மனைவி பேகம் ஹஸ்ரத் மஹால் தலைமையேற்றார்.
  • இவர் தனது மகன் பிரிஜிஸ் கத்ராவை அயோதியின் நவாப்பாக அறிவித்தார்.
  • சர் லாரன்ஸ் என்ற ஆணையர் இக்கலகத்தில் கொலை செய்யப்பட்டார்.
  • மார்ச் 1858ல் சர் கோலின் கேம்பல் என்பவர் அயோத்தியைக் கைப்பற்றினார்.
  • பேகம் ஹஸ்ரத் மஹால் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்.

ஜான்சி

  • டல்ஹவுசிப் பிரபு, ராணி லட்சுமி பாயின் தத்து மகனை ஜான்சியின் அரசராக ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
  • ஜான்சி வாரிசு இழப்பு கொள்கையின்கீழ் பிரிட்டீசாரின் வசம் வந்தது.
  • கான்பூரின் வீழ்ச்சிக்குப் பிறகு தாந்தியாதோப் லட்சுமிபாயுடன் கலகத்தில் இணைந்து கொண்டார்.
  • ராணி லட்சுமிபாய் குவாலியரை தாந்தியாதோப்பின் உதவியுடன் கைப்பற்றினார்.
  • போரில் ஹுக்ரோஸ் என்பவரால் லட்சுமிபாய் தோற்கடிக்கப்பட்டு, போரில் வீர மரணமடைந்தார்.
  • 1858ல் குவாலியர் கைப்பற்றப்பட்டு கலகம் ஒடுக்கப்பட்டது. தாந்தியாதோப் காட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

பைரோலி

  • ரோகில்கண்டின் முன்னால் அரசர் கான் பகதூர்கான் கலகத்தின் தலைவராக மாறினார்.
  • இவர் தனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் குறைவாக இருந்ததால் ஆங்கிலேயருக்கு எதிராக கலந்துகொண்டார்.
  • இவர் 40 ஆயிரம் படை வீரர்களை தயார் செய்து பிரிட்டீசிற்கு எதிராக போராடினார்.
  • இவர் சர் கோலின் கேம்பல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டு போரில் மரணமடைந்தார்.

பீகார்

  • பீகாரில் கலகமானது ஜகதீஸ்பூரின் ஜமீன்தார் குன்வர் சிங்கின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
  • இவர் பிரிட்டீசின் நில வருவாய் முறையினால் பாதிக்கப்பட்டதால் சிப்பாய்களுடன் இணைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
  • 27 ஏப்ரல், 1858ல் ஜகதீஸ்பூரில் மரணமடைந்தார். இவருக்குப்பின் இவரது மகன் அமர் சிங் கலகத்திற்கு தலைமை தாங்கினார்.
  • இக்கலகமானது வில்லியம் டைலர் என்பரால் அடக்கப்பட்டது.

 

இடம்இந்திய அரசர்கள்ஆங்கிலேய தளபதிகள்
டெல்லிபகதூர்ஷா- IIஜான்நிக்கோல்சன்
அயோத்திபேகம்ஹஸ்ரத் மஹால்சர் கோலின் கேம்பல் & ஹென்றி லாரன்ஸ்
கான்பூர்நானாசாகிப்சர் கோலின் கேம்பல்
ஜான்சி குவாலியர்ராணி லட்சுமி பாய்ஜென்ரல் ஹுக் ரோஸ்
பைரேலிகான் பகதூர்கான்சர் கோலின் கேம்பல்
பீகார்குன்வர் சிங்வில்லியம் டைலர்

கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்

  • கலகம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவவில்லை. கிழக்கு, மேற்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகள் கலகத்தினை உணரவில்லை.
  • சில இந்திய அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் பெரிதாக இக்கலகத்தில் ஆர்வம் காட்டவில்லை.
  • பல ஜமீன்தார்கள் தாலுக்தார்கள் மற்றும் வட்டிக்கடைக்காரர்கள் ஆங்கிலேயருக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டனர்.
  • படித்த இந்திய அறிவாளிகள் ஆங்கிலேய அரசால் மட்டுமே இந்தியாவை நவீனமாக மாற்ற முடியும் என நம்பியதால் கலகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
  • கலகத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த பொதுவான தலைமையில்லை.
  • இந்தியர்களிடையே ஒருமித்த இலக்கு எதுவுமில்லை.
  • இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய சிப்பாய்கள் போல் நவீன ஆயுதங்களுடன் போரிடவில்லை.
  • தந்தித் தொடர்பானது கலகத்தின் ஒவ்வொரு நிலையைப் பற்றியும் உடனடியாக ஆங்கிலேயர்களுக்கு தெரியப்படுத்தியது.
  • இரயில் தொடர்பானது தொலைதூரத்திற்கு உடனடியாக சிப்பாய்களை அனுப்ப ஆங்கிலேயர்களுக்கு உதவியது.
  • இக்கலகத்தின் போது இந்திய தேசியவாதம் எனும் கருத்து இந்தியர்களிடையே உருவாகவில்லை.
  • மும்பை, சென்னை, வடபஞ்சாப் மற்றும் இராஜபுத்திரப் பகுதிகள் கலகத்தில் கலந்து கொள்ளவில்லை.
  • சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்கா படைகள் ஆங்கிலேயருக்கு கலகத்தை அடக்க உதவி புரிந்தது.
  • கலகம் தோல்வியில் முடிந்தாலும் பொது எதிரிக்கு எதிராக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்தனர். மராத்தியர்கள் உட்பட அனைவரும் முகலாய அரசர் இரண்டாம் பகதூர்ஷாவைப் பேரரசாக ஏற்றுக் கொண்டனர்.

பெருங்கலகத்தைப் பற்றி பல்வேறு பார்வைகள்

  • இது ஒரு தேசிய தலைமையல்லாத மக்களின் துணையல்லாத தேசப்பற்று அற்ற சுயநல சிப்பாய் கலகம் – சர் ஜான் சீலே. மக்களிள்
  • ஒரு இராணுவக் கலகம் விரைவிலேயே அதன் தன்மையை மாற்றி தேசிய எழுச்சியாக மாறியது “வங்க இராணுவத்தின் உருவாக்கம்” எனும் நூலில் கர்னல் மல்லேசன் குறிப்பிடுகிறார்.
  • இக்கிளர்ச்சி திடீரென ஏற்பட்டது அல்ல, மாறாக பிரிட்டீசின் பல்வேறு கொள்கைகளின் விளைவே ஆகும் – கீன் எனும் வரலாற்று ஆசிரியர்.
  • பெரும்பான்மையாக இது ஒரு உண்மையான சுதந்திரப் போர்- எட்வர்டு ஜான் தாம்சன்.
  • இது ஒரு தேசமும் அல்ல இது ஒரு சுதந்திரப் போரும் அல்ல. ஏனென்றால் இந்தியாவின் பெரும் பகுதி இக்கிளர்ச்சியின் பாதிப்புக்கு உள்ளாகவில்லை – R.C. மஜூம்தார்.
  • இது அனைத்திந்திய தன்மையைக் கொண்டிருக்கவில்லை மாறாக குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்திருந்ததோடு மோசமாக ஒருங்கிணைக்கப்பட்டது – டாக்டர் கே.தத்தா. பிரிட்டீஸ் கூறுவது போன்று இது ஒரு கிளர்ச்சி அல்ல. உண்மையாக அமெரிக்க
  • சுதந்திரப் போரைப் போன்று இதுவும் ஒரு சுதந்திரப் போரே – “இந்திய சுதந்திரப் போர்” எனும் புத்தகத்தில் V.D. சவார்கர் குறிப்பிடுகிறார்.

1857 மற்றும் 1806 கலகங்கள்

  • இரண்டு கலகங்களுமே இராணுவ சீர்திருத்தத்தின் விளைவாக ஏற்பட்டது.
  • 1806 வேலூர் கலகத்திற்கான உடனடி காரணம் புதிய தலைப்பாகை, 1857 கலகத்திற்கான உடனடி காரணம் புதிய தோட்டா குப்பி.
  • 1806 கலகத்தில் மக்கள் கலந்து கொள்ளவில்லை ஆனால் 1857 கலகத்தில் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
  • V.D. சவார்கர் 1806 கலகத்தை “1857ல் நடைபெற்ற முதல் சுதந்திரப்போரின் முன்னோடி” எனக் குறிப்பிடுகிறார். 

1857 கலகத்தின் விளைவுகள்

  • இக்கலகம் இந்தியாவில் பிரிட்டீசின் நிர்வாக முறையை மாற்றியது.
  • நவம்பர் 1, 1858ல் அலகாபாத்தில் நடைபெற்ற இராயல் தர்பார் நிகழ்ச்சியில் விக்டோரியா பேரரசியின் அறிக்கை வெளியிடப்பட்டு பின்பு அது 1858 இந்திய அரசுச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது.
  • இவ்வறிக்கை இந்தியாவின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடாது என நம்பிக்கை அளித்தது.
  • இவ்வறிக்கை அனைத்து விரிவாக்க நடவடிக்கைகளையும் நிறுத்தியதோடு இந்திய அரசர்களை மதிப்பதாக உறுதியளித்தது.
  • இந்திய தலைமை ஆளுநர் பதவியானது வைசிராய் என மாற்றப்பட்டது. இந்தியாவின்
  • முதல் வைசிராயாக கானிங் பிரபு நியமிக்கப்பட்டார்.
  • கிழக்கிந்திய கம்பெனி ஒழிக்கப்பட்டு இந்திய நிர்வாகம் பிரிட்டீஸ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவை நிர்வாகம் செய்ய பிரிட்டீஸ் கேபினெட் 15 பேர் கொண்ட குழுவை இந்திய செயலாளரின் கீழ் நியமித்தது.
  • இயக்குநர் குழு மற்றும் நிர்வாகக் குழு நீக்கப்பட்டது.
  • கிழக்கிந்திய இராணுவம் பிரிட்டீஸ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • வாரிசு இழப்புச் சட்டம் திரும்ப பெறப்பட்டது.
  • பிரிட்டீஸ் இந்திய இராணுவத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தியர்களின் எண்ணிக்கை இராணுவத்தில் குறைக்கப்பட்டதோடு ஆயுத கிடங்குகளின் பொறுப்புகளில் இருந்து இந்தியர்கள் நீக்கப்பட்டனர்.
  • இராணுவத்தில் சீக்கியர்கள், கூர்காக்கள் மற்றும் பதான்கள் போன்ற இந்துக்கள்
  • அல்லாதவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
  • இந்திய இராணுவத்தின் கொள்கையாக பிரித்தாலும் கொள்கையை பிரிட்டீஸ் அரசு அதிகமாக பின்பற்றியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!