இந்திய ரிசர்வ் வங்கி

வரலாறு:

  • 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது,
  • ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.
  • 1937ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
  • ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம்:

  • 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் – யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியியல் தொடர்பான இராயல் ஆணையம் (ஜே.எம்.கீன்ஸ் மற்றும் சர் எர்னெஸ்ட் கேபிள் இதன் உறுப்பினர்கள்) ஒரு மைய வங்கி உருவாக்கப் பரிந்துரைத்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இல் உருவாக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ.5 கோடி மூலதனம் ரூ.100 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளால் உருவாக்கப்பட்டது.
  • பங்கு முதல் தொகை முழுவதும் தனியார் பங்குதாரர்கள் வசம் இருந்தது.
  • இந்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கி (பொது உரிமைக்கு மாற்றுதல்) சட்டம் 1948ஐ நிறைவேற்றியது. மேலும் தனியார் பங்குதாரர்களுக்குச் சரியான இழப்பீட்டுத் தொகையை வழங்கி ரிசர்வ் வங்கியை அரசுடைமை ஆக்கியது.
  • ஜனவரி 1, 1949 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அரசுக்குச் சொந்தமான மைய வங்கியாக செயல்பட்டு வருகிறது,
  • இந்திய ரிசர்வ் வங்கி 1947 வரை பர்மா நாட்டிற்கும் ஜீன் 1948 வரை பாகிஸ்தான் நாட்டிற்கும் மைய வங்கியாகச் செயல்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பு

  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியத் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.
  • மும்பை, தில்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்:

  • காகிதப் பணம் வெளியிடுதல்
  • அரசின் வங்கியாகச் செயல்படுதல்
  • இந்திய வங்கி அமைப்புக்களை நெறிப்படுத்துதல்
  • அந்நியச் செலாவணியின் பாதுகாவலன்
  • கடன் அளிப்பை நெறிப்படுத்துதல்

நிர்வாகம்:

  • மைய வங்கி / மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர்
  • ‘கடைசி நிலைக் கடன் ஈவோன்’
  • உள்நாட்டில் இந்தியாவின் செலாவணி ரூபாய் எனவும் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி எனவும் அழைக்கப்படுகிறது.
  • உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது,

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the rupee and its Solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின்  அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் (Repo Rate (RR)):

  • வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
  • இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறும். அந்நிலையில் விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவை அதிகபடுத்தி, கடன் வாங்குவதைக் குறைக்கிறது.
  • பணவாட்ட சூழ்நிலையில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு கடன் வழங்குதல் அதிகரிக்கும்.

மீள் ரெப்போ விகிதம் (Reverse Repo Rate (RRR)):

  • வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
  • மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், அது வணிக வங்கிகளுக்கு இலாபகரமான வட்டி விகிதமாகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது.
  • இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பது குறைகிறது.
  • இது இயற்கையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

பண அளிப்பு

  • இந்தியாவில் காகிதப் பணங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவாலும் நாணயங்கள் மத்திய அரசின் நிதித்துறையாலும் வெளியிடப்படுகின்றது.
Ø  M0 = இருப்பு பணம் – புழக்கத்தில் உள்ள பணம் + RBI ல் வங்கி வைப்பு + RBI ல் பிற  வைப்புகள்

Ø  M1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை

Ø  M2 = MI+ அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

Ø  M3 = M2+ அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்

Ø  M4 = M3+ அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்

Ø  MI மற்றும் M2 குறுகிய பணம் என்றழைக்கப்படுகிறது.

Ø  M3 மற்றும் M4 பரந்த நிலை பணம் என்றழைப்படுகிறது.

ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio – CRR)

  • வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு / வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள் என்ற விகிதம்

சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity – SLR)

  • வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/ வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள் என்ற விகிதம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!