சர் சையத் அகமத்கான் (1817-1898). டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார்.
மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார்.
மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும்படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.
1864 ஆம் ஆண்டு காசிப்பூர் என்னும் இடத்தில் சையது அகமதுகான் ஓர் பள்ளியை நிறுவினார். பின்னர் இது அறிவியல் கழகம் (Scientific Society) என்று அழைக்கப்பட்டது
அக்கழகம் பல்வேறு அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டது.
1857 ம் ஆண்டு அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல்(MAO) கல்லூரி இவரது சிறந்த சாதனையாகத் திகழ்கின்றது.
இக்கல்லூரியே பிற்காலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது.
சர் சையது அகமதுகான் தொடங்கிய சீர்திருத்த இயக்கம், அலிகார் இயக்கம் என அழைக்கப்பட்டது.
பெண்கள் முகத்திரை (பர்தா) அணிவதை நீக்கவும், பெண் கல்வி வளரவும் பாடுபட்டார்.
முஸ்லீம்களிடையே தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்காக தாசில்-உத்-அஃலக் என்னும் தினசரி பத்திரிக்கையை நடத்தினர்.
“இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழுகிய பறவையின் இரு கண்கள்’ என்று கூறினார்.
அகமதியா இயக்கம் (1889)
நிறுவியவர்: மிர்சா குலாம் அகமது(1835 – 1908)
குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சமூக நெறிமுறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டத்துடனே பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.
தியோபந்த் இயக்கம்
தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால், இரு முக்கியக் குறிக்கோள்களுடன் தொடங்கப்பெற்றது.
குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளைப் பரப்புரை செய்தல்.
இஸ்லாமல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல்.
இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி(1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1828 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்.
தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பணிகளுக்குத் தயார் செய்யவில்லை. மாறாக இஸ்லாம் மத நம்பிக்கையைப் பரப்புரை செய்யத் தயார்செய்தது.
தியோபந்த் பள்ளி 1885 இல் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது.
1888 இல் தியோபந்த் உலேமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான ‘தி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன்‘ (The United Patriotic Association), ‘முகமதன் ஆங்கிலோ-ஓரியண்டல் அசோசியேஷன்’ (The Mohammedan Anglo-Oriental Association) ஆகியவற்றிற்கு எதிராக சமய ஆணையைப்(fatwa) பிறப்பித்தது.
சர் சையத் அகமத்கானுடைய நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற அவர்களின் உறுதிப்பாடே தியோபந்த் உலேமாக்களை இயக்கியது எனச் சொல்லப்பட்டது.
நடவத் – அல் – உலாமா
1894 இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறு சில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது.
இறைமறுப்புக் கொள்கை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஃபரங்கி மஹால்
இச்சிந்தனைப் பள்ளி லக்னோவிலுள்ள ஃபரங்கி ஹாலில் உருவானது.
மற்ற இரண்டைப் போலல்லாமல் பிரங்கிமஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது.
மற்றொரு மரபுசார்ந்த இயக்கம் அல் – இ – ஹதித் அல்லது நபிகள் நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.