இந்தியாவின்பல்வேறுபகுதிகளும்அரசியல்அடிப்படையிலும் ஆட்சியடிப்படையிலும் முதன்முறையாக ஒரு குடையின்கீழ் (பிரிட்டிஷ் ஆட்சி) கொண்டுவரப்பட்டது.
ஒரே சீரான சட்டமும் அரசும் அறிமுகப்படுத்தப்பட்டன.
தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
இரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள் மற்றும்சாலைகள் கால்வாய்கள் மூலமான போக்குவரத்து வசதிகள்அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்களிடையே தகவல் தொடர்பு எளிதாகியது.
இந்தியர்கள்ஒருவருக்கொருவர்நெருக்கமாயினர்.மேலும், அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம்தோன்றவும் இது வழிவகுத்தது.
ஆங்கில மொழியும் மேலைநாட்டுக் கல்வியும்
நாட்டில்தேசியம்வளரஆங்கிலமொழிபெரும்பங்காற்றியது.
ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்துதலைமை தாங்கி நடத்திச் சென்றனர்.
மேலை நாட்டுக்கல்வி மூலம், சுதந்திரம், சமத்துவம். கருத்துக்கள் விடுதலை, தேசியம் போன்ற மேலைநாட்டு தேசியம் இந்தியாவில்தோன்றலாயிற்று.
பத்திரிக்கைகளின் பங்கு
இந்தியாவில் வெளியான ஆங்கிலம் மற்றும் நாட்டு மொழிபத்திரிக்கைகள் தேசியச் சிந்தனையைப் பரப்பின.
ராஜாராம் மோகன் ராய் வங்க மொழியில்சம்வாத் கௌமுடி மற்றும் பாரசீக மொழியில் மிராத் உல் அக்பர் பத்திரிகையையும் நடத்தினார்.
1878 ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன
G.சுப்ரமணியனார் மற்றும் வீரராகவாச்சாரியார் இணைந்து இந்து பத்திரிகையை 1878தொடங்கினர்.
விரைவில் பத்திரிக்கைகள் தேசியத்தை பரப்பும் ஒரு வாகனமாக செயல்பட்டது.
19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம ஞான சபை போன்ற அமைப்புகள் தாய்நாட்டின் பெருமைகளை மக்களிடையே எடுத்துரைத்து நாட்டுப்பற்று குறித்த உணர்வைத் தூண்டின.
பிரிட்டிஸாரின் பொருளாதாரச் சுரண்டல்
இந்தியாவை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை மக்களிடையே பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வைஏற்படுத்தியது.
இந்திய வணிகத்தையும் கைத்தொழிலையும் ஆங்கிலேயர் திட்டமிட்டு அழித்தனர்.
எனவே, பிரிட்டிஸாரின் பொருளாதாரச் சுரண்டல் இந்திய தேசியம் தோன்றுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
இனப்பாகுபாடு
1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும் பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவும், இந்திய மக்களும் பல்வேறு அவமானங்களுக்கும்ஒடுக்குதல்களுக்கும்உட்படுத்தப்பட்டனர்.
லிட்டனது நிர்வாகம்
லிட்டன் பிரபு, இந்தியாவின் பெரும்பகுதி பஞ்சத்தினால்துன்பத்தில் துவண்டு கிடந்தபோது டெல்லி தர்பாரை நடத்தினார்.
1878 நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை கொண்டுவந்துஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கினார்.
ஆயுதங்கள் சட்டம் 1878 இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்தது.
லிட்டனின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியரிடையே பரவலான வெறுப்பை ஏற்படுத்தியது.
இல்பர்ட் மசோதா சச்சரவு (1883)
ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டசபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும் இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாகஎதிர்த்தனர். இறுதியில் இது திரும்பப் பெறப்பட்டது.