பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகள்:
- பிராந்தியவாதம் இந்திய அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும் மற்றும் இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது.
- எனவே, அத்தகைய போக்குகளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
வளர்ச்சி நடவடிக்கை
- புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல். அப்பொழுதுதான் தாங்களும் தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்கிற உணர்வு மேலோங்கும்.
மத்திய அரசு மாநில அரசு ஒற்றுமை
- மத்திய அரசு மாநில அரசு விவகாரங்களில் தவிர்க்க முடியாத தேசிய நலன் தொடர்பான விஷயங்கள் தவிர பெரும்பாலும் தலையிடக்கூடாது.
மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
- மக்களுடைய பிரச்சனைகள் அமைதியாகவும் அரசியலமைப்பு முறையிலுமே தீர்க்கப்பட வேண்டும்.
- பிராந்திய கோரிக்கைகளின் சிக்கலை தவறாக பயன்படுத்த அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது.
மத்திய மாநில உறவுகள்
- மத்திய மாநில உறவுகளில் மாநிலங்கள் சார்பான மாற்றத்தை கொண்டு வருவது அவசியமாகும்.
தேசிய கல்வி முறை
- தேசிய கல்வி முறையை அறிமுகப்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் பிராந்திய உணர்வுகளை மக்களிடத்தில் வென்று தேசம் உடனான இணைப்பை நோக்கி மக்களை மேம்படுத்த முடியும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைத் தவிர, மாநிலங்களுக்கு தங்கள் சொந்த விவகாரங்களை கையாள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
English bro