Contents show
இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள்
கல்விக் கொள்கை
- தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் கல்வி மேல் எத்தகைய ஆர்வமும் கொண்டிருக்கவில்லை.
- 1781ல் வாரன் ஹாஸ்டிங் கல்கத்தாவில் மதராசாவை இஸ்லாமியச் சட்டங்கள் பயில
- ஏற்படுத்தினார்.
- இந்துக்களின் இலக்கியம் மற்றும் மதத்தினை அறிந்து கொள்ள ஜொனார்த்தன் டங்கன் என்பவர் 1791ல் வாரனாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்.
- 19 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் மட்டுமே 1,80,000 பழமையான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டன.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் கல்வியில் இரு கொள்கைகளை பின்பற்றினர்.
- கீழ் திசை கல்வி முறையை ஊக்குவிக்கவில்லை.
- மேற்கத்திய கல்வி முறை மற்றும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளித்தனர்.
- பட்டயச் சட்டம் 1813 இந்தியர்களின் கல்விக்கு 1 இலட்சம் ரூபாய் ஒதுக்கியபோதும் 20 வருடங்களுக்கு அந்நிதியிலிருந்து 1 ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை.
ஆங்கில கல்வியாளர்கள் இந்தியர்களுக்கு கல்வி வழங்குவதில் இரண்டு பிரிவாக பிரிந்தனர்.
- கீழ்திசைவாதிகள் இவர்கள் கீழ்திசை கல்வி முறைக்கும் இந்திய மொழிகளுக்கும் ஆதரவு அளித்தனர்.
- ஆங்கிலவாதிகள் -இவர்கள் மேற்கத்திய அறிவியல் மற்றும் இலக்கியங்களோடு ஆங்கிலேய மொழிக்கு ஆதரவு அளித்தனர்.
- 1828ல் வில்லியம் பெண்டிங் பிரபு ஆங்கிலேய மொழியில் கல்வி வழங்க வேண்டும் என வாதிட்டார். மேலும் பட்டயச் சட்டம் 1813ல் கொடுக்கப்பட்ட கல்வி நிதியைப் பயன்படுத்த முயற்சி செய்தார்.
- கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியையும் மும்பையில் எல்பின்ஸ்டோன் கல்லூரியையும் நிறுவினார்.
- 1835ல் 10 பேர் கொண்ட கல்வி குழுவை மெக்காலே என்பவரின் தலைமையின் கீழ் ஏற்படுத்தினார்.
- இக்குழுவானது இரு பிரிவுகளாக பிரிந்தது. ஒரு குழு கீழ்திசை கல்விக்கும் மெக்கலே உட்பட மற்ற குழு மேற்கத்திய கல்விக்கும் ஆதரவு அளித்தனர்.
- பிப்ரவரி 2, 1835ல் மெக்கலே பிரபு தனது பிரபலமான கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
- மார்ச் 7, 1835ல் வில்லியம் பெண்டிங் பிரபு மெக்காலே குழுவின் அறிக்கையின்படி மேற்கத்திய இலக்கிய மற்றும் அறிவியல் கல்வியை ஆங்கில மொழியில் கற்பிக்கும் கொள்கையை வெளியிட்டார்.
- 1854ல் டல்ஹௌசி பிரபு, சர் சார்லஸ் உட் என்பவரின் தலைமையின் கீழ் கல்விக்
- குழுவை நியமித்தார்.
- இக்குழுவின் அறிக்கையின்படி பல்வேறு சீர்திருத்தங்களை டல்ஹெளசி மேற்கொண்டார்.
- சார்லஸ் உட்டின் அறிக்கை இந்திய ஆங்கிலேயக் கல்வியின் மாக்ன கர்தா எனவும் இந்தியாவின் அறிவுசார் சாசனம் எனவும் அழைக்கப்படுகிறது.
- இக்குழு தொடக்க கல்விக்கு தாய் மொழியையும், இடைநிலைக் கல்விக்கு தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியையும் மேலும் உயர் கல்விக்கு ஆங்கிலேய மொழியையும் பரிந்துரைத்தது.
- லண்டன் பல்கலைக்கழத்தின் மாதிரியின் அடிப்படையில் தொடக்க. இடை மற்றும் கல்லூரி கல்வி அமைப்பை ஏற்படுத்தியது.
- டல்ஹௌசியின் நடவடிக்கையால் பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டது.
- ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறை ஏற்படுத்தப்பட்டது.
- ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்படுத்தப்பட்டது.
- தனியாரின் கல்விச் சேவையை அதிகரிக்க நிதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1857 – 60 கல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் ஏற்படுத்தப்பட்டன. மற்றும் பல்கலைக்கழகங்கள்
- உத்தரகண்டின் ரூர்க்கியில் பொறியியல் கல்லூரி நிறுவப்பட்டது.
சமூக கொள்கைகள் மற்றும் சட்டங்கள்
- 1813 வரை ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் மத, சமூக மற்றும் கலாச்சார பண்பாட்டில் தலையீடாக் கொள்கையை பின்பற்றினர்.
- தொழிற்புரட்சிக்கு பின்பு இந்தியா ஆங்கிலேயர்களின் பெரும் சந்தையாக மாறியதால்
- இந்தியாவை நவீனமாக்க வேண்டிய தேவை இருந்தது.
- 19 ஆம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரை ஈர்த்தது.
- பத்திரிக்கைகளின் தாக்கம் ஆங்கிலேயர்களை சமூக கொடுமைகளுக்கு எதிராக செயல்பட தூண்டியது.
- வில்லியம் பெண்டிங் போன்று சில நிர்வாகிகள் இச்சீர்திருத்தங்களில் தனி விருப்பு கொண்டிருந்தனர்.