சரத்து 14
- ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை.
- அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் சம வாய்ப்பு.
சரத்து 15(1)
- மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் (அ) இவற்றில் ஒன்றை வைத்து அரசு பாகுபாடு காட்டக்கூடாது.
சாத்து 15(3)
- பெண்கள், குழந்தைகளுக்கு அரசு சிறப்பு சலுகைகளை ஏற்படுத்தலாம்.
- அரசு நியமனங்களில் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு
சரத்து 16
- சாதி, சமய, இன, பால், வம்சாவழி, பிறப்பிட, இருப்பிட வேறுபாடுகளினால் மட்டும் அரசு வேலையைப் பெறத் தகுதி இல்லை என்று எந்தக் குடிமகனுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.
சரத்து 23:
- மனித கடத்தல், அடிமைத் தொழிலாளர் முறை தடை.
சரத்து 39(a)
- அனைவரின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தல்
சரத்து 39(d)
- ஆண்கள் மற்றும் பெண்களின் சமமான வேலைக்கு உத்திரவாதம்
சரத்து 42
- சமமான ஊதியம் நியாயமான பணியிட சூழலையும், நடைமுறைப்படுத்த அரசு முயற்சித்தல்.
சரத்து 51A (e)
- பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்களை விடுத்தல்
சரத்து 300A.
- பெண்களுக்கு சொத்துரிமை
73வது மற்றும் 74வது (சட்டத்திருத்தம்) சட்டம், 1992:
- பஞ்சாயத்து, நகராட்சிகளில் பெண்களுக்கு 1/3 இடங்கள் ஒதுக்கீடு.
- ஏப்ரல் 24 பெண்கள் அதிகாரமளிப்பு தினம். (73வது சட்டத்திருத்தம் செயல்பட்டிற்கு வந்த நாள்)