உலா
- உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்
- தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் (ஏழு) 7 வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
- உலா கலிவென்பாவால் இயற்றப்படுகின்றது*
முன்னிலை உலா பின்னிலை உலா
- பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை முன்னிலை உலா என்பர்.***
- உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன பின்னிலை உலா எனப்படும். ***
பருவப் பெண்களின் ஏழு வயது கால பிரிவுகள்
- 5 – 7 – பேதை
- 8 – 11 – பெதும்பை
- 12 13 – மங்கை
- 14 19 – மடந்தை
- 20-25 – அரிவை
- 26 – 32 – தெரிவை
- 33 – 40 – பேரிளம் பெண்
ஒட்டக்கூத்தர்
- இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
- “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் ஒட்டக்கூத்தர் புகழப்படுவார். ***
- விக்ரமசோழன், (இரண்டாம்) 2ம் குலோத்துங்கச் சோழன், (இரண்டாம்) 2ம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர் ஒட்டக்கூத்தர் ***
- விக்ரமசோழன், (இரண்டாம்) 2ம் குலோத்துங்கச் சோழன். (இரண்டாம்) 2ம் ராசராசன் ஆகிய மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியது, “மூவருலா”
- ஒட்டக்க்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.
- ஓட்டம் (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார் **
முந்தைய ஆண்டு வினாக்கள்
மடந்தை பருவத்தின் வயது
(A) 8-11
(B) 12-13
(C) 14-19
(D) 20-25
(E) விடை தெரியவில்லை
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
(A) மடந்தை
(B) அரிவை
(C) மங்கை
(D) தெரிவை
‘மூவருலா’ எந்த மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டது?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்
சரியான வைப்பு முறையைக் குறிப்பிடுக.
(A) பேதை, பெதும்பை, மடந்தை,மங்கை
(B) பேதை, மங்கை, பெதும்பை,மடந்தை
(C) பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
(D) பேதை, மங்கை, மடந்தை, பெதும்பை
‘உலா’ எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
(A) கலிவெண்பா
(B) ஆசிரியப்பா
(C) விருத்தப்பா
(D) வஞ்சிப்பா
‘உலா’ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர்
(A) உலா மடம்
(B) உலா மடல்
(C) உலாப்புறம்
(D) உலாக்குறம்
(E) விடை தெரியவில்லை
‘மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர்’- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
(A) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(B) கம்பர்
(C) குமரகுருபரர்
(D) ஓட்டக்கூத்தர்
‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப’ நூற்பாவுக்கேற்றதொரு இலக்கிய வடிவம் என்ற தொல்காப்பிய _______
(A) பரணி
(B) உலா
(C) குறவஞ்சி
(D) பள்ளு
(E) விடை தெரியவில்லை
‘பிள்ளைத் தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) புகழேந்தி
(C) குமரகுருபரர்
(D) பகழிக்கூத்தர்
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————