ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933)

தமிழின் சிறப்புகள்

  • யாமறிந் மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்

பாரதியார்.

  • இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – பிங்கல நிகண்டு
  • உலகத் தாய்மொழி நாள்பிப்பிரவரி 21
  • தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்இலங்கை, சிங்கப்பூர்

ஈரோடு தமிழன்பன்

  • தமிழோவியம் கவிதையை எழுதியவர் ஈரோடு தமிழன்பன்.
  • ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை… பாடலும் அப்படித்தான்!” என்று தமிழோவியம் நூலைக் குறித்துக் கவிஞர் முன்னுரையில் ஈரோடு தமிழன்பன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் தந்துள்ள புதுப்புது கவிதை வடிவங்கள்

  • ஹக்கூ
  • லிமரைக்கூ
  • சென்ரியு

ஈரோடு தமிழன்பன் பெற்றுள்ள விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது
  • தமிழக அரசின் பரிசு
  • ஈரோடு தமிழன்பனின் வணக்கம் வள்ளுவஎன்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • ஈரோடு தமிழன்பன் தமிழன்பன் கவிதைகள்நூலுக்காக தமிழக அரசின் பரிசு பெற்றார்.

ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்

  • உருது
  • இந்தி
  • மலையாளம்
  • ஆங்கிலம்
  • ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழோவியம் – ஈரோடு தமிழன்பன்

  • ஈரோடு தமிழன்பன் எழுதிய தமிழோவியம்என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை.

தமிழை தமிழோவியமாகக் கண்டு மகிழ்வோம்

என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீ தான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீ தான்!

அறியும் இலக்கணம் தந்ததும் நீ தான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீ தான்!

காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்!

ஆதிமுதல் எல்லாமுமாய் இயங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்!

கவிதை

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!

எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

காலம் பிறக்கும் முன்

ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் நீதி ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள் மட்டுமே போதுமே ஓதி நட

காலம் பிறக்கும் முன்

எத்தனை எத்தனை சமயங்கள் தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே

சித்தர் மரபிலே தீதறுக்கும் புதுச் சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே

காலம் பிறக்கும் முன்

விரலை மடக்கியவன் இசையில்லை எழில் வீணையில் என்று சொல்வது போல்

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்! ***

– ஈரோடு தமிழன்பன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!