உஜாலா திட்டம்
- இந்திய அரசு கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவான LED பல்புகளை வழங்குவதற்கான “கிராம் உஜாலா திட்டத்தினை” தொடங்கியுள்ளது.
- இது கிராமப்புறப் பகுதிகளில் வெறும் ரூ. 10க்கு உலகின் விலைமலிவான LED பல்புகளை வழங்குகிறது.
- மேலும் இது கிராமப்புற நுகர்வோர்களிடமிருந்து ஒளிரும் விளக்குகள் மற்றும் CFL (சிறிய ஒளிரும் விளக்குகள்) பல்புகளைத் திரும்ப பெறவும் வேண்டி விதிமுறைகளை கூறியுள்ளது.
நோக்கம்
- இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச் செலவைக்குறைத்து அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணைபோவதும்தான்.
இலக்குகள்
- 20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.
- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது
- மின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5000 மெஹாவாட் குறைப்பது
- நுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ. 40000 கோடியைக் குறைப்பது.
- பசுமை இல்ல வாயு (கார்பண்டை ஆக்ளைடு) வெளியேற்ற அளவை ஆண்டுக்கு 7.9 கோடியுடன் குறைப்பது.
செயல்படுத்தும் முகமைகள்
- மின்சார விநியோக நிறுவனங்களும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனமும் (EESL) இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
LED பல்புகள் பெறுவதற்கான தகுதி
- வீட்டில் மின்சார இணைப்புப் பெற்றுள்ளவர்கள், தமக்கு மின்விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து LED பல்புகளை நாற்பது சதவீத விலைமட்டும் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். LED பல்புகளுக்கான விலையை மாதாந்திரத் தவணைகள் மூலமாகவும் செலுத்தலாம்.