- கி.பி.1453 இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டி நோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும். ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது.
- எனவே புதிய வழியை உடனடியாக கண்டடைய வேண்டிய தேவை உருவானது
- அனைத்து ஐரோப்பிய அரசுகளும் புதிய வழியை கண்டுபிடிக்க மாலுமிகளை ஊக்குவித்தது.
Contents show
போர்த்துக்கீசியர்களின் வருகை
- பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்பட்ட போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராய நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
- 1487-ஆம் ஆண்டு பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார். மன்னர் இரண்டாம் ஜான் அவரை ஆதரித்தார்.
- ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் இந்தியாவை அடையவில்லை. அப்பகுதிக்கு புயல் முனை எனப்பெயரிட்டார். பின்பு அது நன்னம்பிக்கை முனை என பெயர் மாற்றப்பட்டது.
வாஸ்கோடகாமா
- வாஸ்கோடகாமா 1498-இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்றார்.
- இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் 1500-ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். சாமரின் அரசருக்கும் கேப்ரலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- வாஸ்கோடகாமா 1501-ல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார்.
- கொச்சின் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று. 1524-ல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்த பொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524 இல் கொச்சியில் காலமானார்.
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் ஆளுநர்.
- இவரின் கொள்கை “நீல நீர் கொள்கை” என அறியப்படுகிறது. இந்திய பெருங்கடலில் மேலாண்மை செலுத்துபவர்களே ஆசிய, ஐரோப்பிய வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதே இக்கொள்கை ஆகும்.
- சாமரின் மற்றும் எகிப்திய சுல்தானின் கடற்படையை தோற்கடித்தார்.
- கண்ணூர் மற்றும் கொச்சினில் கோட்டை கட்டினார்.
- சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் இஸ்லாமிய கூட்டுப்படையால் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டார்.
- டையூ அருகில் நடைபெற்ற போரில் அல்மெய்டா இஸ்லாமிய கூட்டு படையை தோற்கடித்தார்.
- கி.பி.1509-ல் போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.
அல்போன்சோ டி அல்புகர்க்
- இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்
- நவம்பர் 1510-ல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றினார்.
- 1515-ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை விரிவுப்படுத்தினார்.
- இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்.
- விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
- சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த முயன்றார்.
- மலேசியாவின் மலாக்காவை கைப்பற்றினார்.
நினோ-டி-குன்ஹா
- இவர் தலைநகரை கொச்சினில் இருந்து கோவாவிற்கு மாற்றினார்.
- 1534-ல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார்.
- 1537- ல் டையூவையும் டாமனையும் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548 ல் ஆக்கிரமித்தார்.
- இவருக்குப் பின் வந்த ஆன்டானியோ டி நொரன்கா காலத்தில் காம்பே வந்த அக்பர் போர்ச்சுகீசியர்களுடன் உறவை ஏற்படுத்தினார்.
போர்ச்சுகீசியர்கள் ஆட்சியின் விளைவுகள்
- ஐரோப்பிய நெறிமுறைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.
- கோவாவில் 1556ல் போர்ச்சுகீசியர்களால் அச்சு எந்திரம் அமைக்கப்பட்டது.
- 1563 ல் ஐரோப்பிய எழுத்தாளர் இந்திய மருத்துவ தாவரங்களைப் பற்றிய புத்தகத்தை கோவாவில் வெளியிட்டார்.
- இவர்கள் இந்தியாவில் புகையிலை உற்பத்தியை அறிமுகப்படுத்தினர்.
- இந்தியப் பெருங்கடலில் அரேபியரின் முற்றுரிமை மற்றும் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தினர்.
- சேசு சபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542-ல் கோவாவை அடைந்து தூத்துக்குடி வரை சென்று திருமுழுக்கு சடங்கு நடத்தினார்.
சேசுசபை பாதிரியார்களில் இருவர் மிகமுக்கியமானவர்கள்
- ராபர்ட் டி நொபிலி – தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- ஹென்றிக்ஸ் – தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை.
- இவர் தமிழ் மொழியின் முதல் பதிப்பு நூலான தம்பிரான் வணக்கத்தை அச்சிட்டார்.
- இது “கிறிஸ்டம் என் லிங்க மலவுர் தமுழ்” என்ற போர்த்துகீசி மொழி நூலின் மொழியாக்கம் ஆகும்.
போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சி
- இந்திய ஆட்சியாளர்களுடன் குறிப்பாக முகலாயர்களுடன் நல்லுறவை பேணவில்லை.
- கார்ட்டாஸ் எனும் போர்ச்சுகீசியர்களின் முறை இந்திய மற்றும் வெளிநாட்டு வணிகர்களிடையே பகைமையை ஏற்படுத்தியது.
- இவர்களின் மதநல்லிணக்கமின்மை மக்களுக்கும் அரசர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
- விஜயநகர பேரரசின் 1565 தலைக்கோட்டைப் போர் வீழ்ச்சி தெற்கில் பின்னடைவை ஏற்படுத்தியது.
- 1580-ல் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் போர்ச்சுக்கல்லை கைப்பற்றியது பின்னடைவை ஏற்படுத்தியது.
- டச்சு போர்ச்சுகீசியரை வீழ்த்தி சிலோனையும் மலபார் கோட்டையையும் கைப்பற்றியது.
- 1739க்கு பிறகு இவர்கள் ஆட்சி கோவா டையூ மற்றும் டாமனுடன் சுருங்கி போயிற்று.
- டச்சு போர்ச்சுக்கல்லை கைப்பற்றியபின் இவர்கள் தென் அமெரிக்க நாடுகளின் மீது கவனம் செலுத்தினர்.