கவிஞர் சு. வில்வரத்தினம் & ஆறுமுக நாவலர்

கவிஞர் சு. வில்வரத்தினம்

  • கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.
  • கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் தலைப்பில் 2001ல் தொகுக்கப்பட்டுள்ளன.
  • கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர் கவிஞர் சு. வில்வரத்தினம்.
  • கவிஞர் சு. வில்வரத்தினத்தின் (இரண்டு) 2 கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கவிதை

என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே!

வழி வழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர். வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே! ***

உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்! ***

காற்றிலேறிக் கனை கடலை, நெருப்பாற்றை, மலைமுகடுகளைக் கடந்து செல் எனச் செல்லுமோர் பாடலை

கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின் உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும்! ***

ஏடு தொடக்கி வைத்து என்னம்மை மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல் முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோர் பாடலை***

-சு. வில்வரத்தினம்

 

ஆறுமுக நாவலர்

  • அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக காலோட்டப் புக்குழி’

-ஆறுமுக நாவலர்

பொருள்

‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’

ஆறுமுக நாவலர்

  • ஆறுமுக நாவலர் காலம் 1822-1879.
  • வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படுபவர் ஆறுமுக நாவலர்.
  • ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.
  • ஆறுமுக நாவலருக்கு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் பட்டம் வழங்கியது.
  • பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் ஆறுமுக நாவலர் உதவினார்.
  • தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார் ஆறுமுக நாவலர்.
  • ஆறுமுக நாவலர், புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
  • ஆறுமுக நாவலர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.

ஆறுமுக நாவலர் எழுதிய பாட நூல்கள்

  • பூமி சாஸ்திரம்
  • இலக்கண நூல்கள்

ஆறுமுக நாவலர் பதுப்பித்த நூல்கள்

  • சங்கர நமச்சிவாயர் விருத்தி உரை
  • திருக்குறள் பரிமேலழகர் உரை
  • சூடாமணி நிகண்டு உரை
  • நன்னூல் உரை

ஆறுமுக நாவலரின் பன்முக ஆளுமைகள்

  • பாடசாலை நிறுவுதல்
  • அச்சுக்கூடம் நிறுவுதல்
  • உரைநடை ஆக்கம்
  • கண்டன நூல்கள் படைத்தல்
  • தமிழ்நூல் பதிப்பு
  • சைவ சமயச் சொற்பொழிவு

நீதிமன்றத்தில் ஆறுமுக நாவலரின் தமிழ்

  • வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஆறுமுக நாவலர்.
  • அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள்.
  • தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார்.
  • அவர் உடனே ‘அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார் ஆறுமுக நாவலர்.
  • மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார்.
  • அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார்.
  • சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது ஆறுமுக நாவலர் கூறியதற்குப் பொருள்.
  • இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர் தான் ஆறுமுக நாவலர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!