கா.ப.செய்கு தம்பி பாவலர் & திரு.வி. கலியாணசுந்தரனார்

கா.ப.செய்கு தம்பி பாவலர்

  • சதாவதானம் என்னும் கதையில் சிறந்து விளங்கியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர்.
  • சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர்.
  • 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் (நூறு) 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி என்று பாராட்டுப்பெற்றார் கா.ப.செய்குதம்பிப் பாவலர்.
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்வர்.
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் (பதினைந்து) 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றர்.
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் 1874ல் பிறந்து 1960ல் மறைந்தார்.
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் நினைவைப் மணிமண்டபம் பள்ளியும் உள்ளன. போற்றும் வகையில் இடலாக்குடியில்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் எழுதிய அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

சதம் – சதாவதனம்

  • ‘சதம்’ என்றால் (நூறு) 100 என்று பொருள்.
  • ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண் அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் (நூறு) 100 செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதனம்.

நீதிவெண்பா – கா.ப.செய்கு தம்பி பாவலர்

  • உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே
  • நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்.

கவிதை

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. *

-கா.ப.செய்குதம்பிப் பாவலர்

திரு.வி. கலியாணசுந்தரனார்

  • திரு.வி. கலியாணசுந்தரனாரின் காலம் 1883-1953
  • ‘தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் திரு.வி. கலியாணசுந்தரனார்.
  • திரு. வி. க என்பதன் முழு பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யானசுந்தரனார்.
  • இளமை விருந்து நூலில் தமிழினைச் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி. கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார்.
  • திரு.வி. கலியாணசுந்தரனார் தமிழை வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரை வேலர் என்பவரிடம் படித்தார்.
  • திரு.வி. கலியாணசுந்தரனார் தமிழோடு சைவ நூல்களையும் மயிலை தணிகாசலம் என்பவரிடம் பயின்றார்.
  • திரு.வி. கலியாணசுந்தரனார் சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக பணியில் இருந்தார்.
  • தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார் திரு.வி. கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க சிறந்த மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.
  • அரசியல், சமுதாயம், சமயம். தொழிளாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்
  • தமிழ் அறிஞர்களுள் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார் திரு.வி.க.
  • திரு.வி.க இலக்கியப்பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

திரு.வி.க எழுதியுள்ள நூல்கள்

  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • இளமை விருந்து
  • தமிழ்ச்சோலை
  • இந்தியாவும் விடுதலையும்
  • சைவத்திறவு

திரு.வி.க ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள்

  • பெண்ணின் பெருமை
  • பொதுமை வேட்டல்
  • முருகன் அல்லது அழகு
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
  • திருக்குறள் விரிவுரை
  • நவ சக்தி
  • தேச பக்தன்

இளமை விருந்து – திரு.வி.க

  • தமிழினைச் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைத்த திரு.வி.க.

கவிதை

“பொறுமையைப் பூணுங்கள். பொறுமையின் ஆற்றலை உணருங்கள். உணர்ந்து உலகை நோக்குங்கள்

நமது நாட்டை நோக்குங்கள், நமது நாடு நாடாயிருக்கிறதா?

தாய்முகம் நோக்குங்கள், அவள் முகத்தில் அழகு காணோம், அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை. பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன. எரிக்கின்றன.

இந்நோய்களால் குருதியோட்டம் குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள்.

இளஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள்.

இளஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள், எழுங்கள்”

-இளமை விருந்து. திரு.வி.க.

 

பல்துறைக் கல்வி – திரு.வி.க

  • இளமை விருந்து என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
  • திரு.வி.க.வின் கல்விச் சீர்திருத்தச் சிந்தனைகள்

கல்வி

  • அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும்.
  • மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்து வரல் வேண்டும்.
  • அறிவோம்பலுக்குக் கல்வி தேவை.
  • கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டுவதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.

திரு.வி.க குறிப்பிடும் பல்துறை கல்விகள்

  • காப்பியக் கல்வி
  • அறிவியல் கல்வி
  • ஏட்டுக்கல்வி
  • தாய்மொழி வழிக்கல்வி
  • இசைக் கல்வி
  • நாடகக் கல்வி
  • தமிழ்வழிக் கல்வி
  • இயற்கை கல்வி

காப்பியக் கல்வி

  • வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று காவிய இன்பம்.
  • தலையாயது என்றும் காவிய இன்பத்தை கூறலாம்.
  • நாம் தமிழர்கள். நாம் பட்டின்பத்தை நுகர வேண்டுமானால் நாம் எங்குச் செல்லல் வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ?

தமிழில் இருக்கின்றன இலக்கியங்கள்

  • இயற்கைத் தவம்
  • இயற்கை ஓவியம்
  • சிந்தாமணி
  • பத்துப்பாட்டு
  • இயற்கை இன்பக்கலம்
  • கலித்தொகை
  • இயற்கை வாழ்வு இல்லம்
  • திருக்குறள்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்
  • சிலப்பதிகாரம், மணிமேகலை
  • இயற்கை அன்பு
  • பெரிய புராணம்
  • இயற்கைப் பரிணாமம்
  • கம்பராமாயணம்
  • இயற்கை இறையுறையுள்
  • திருவாய்மொழிகள், திருவாசகம், தேவாரம்
  • இத்தமிழ்க் கருவூலங்கள் உன்ன உன்ன உள்ளத்தெழும் இளப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
  • இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ?
  • தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

அறிவியல் கல்வி

  • உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாத அறிவுக்கலை அறிவியல்.
  • உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும்.
  • இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.
  • புற உலக ஆராய்ச்சிக்கு கொழுகொம்பு போன்றது அறிவியல்.
  • நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.
  • இக்கால உலக்த்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

ஏட்டுக்கல்வி

  • இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது.
  • இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.
  • குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து. தேர்வில் தேறிப் பட்டம் பெற்று. ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகுமா?
  • ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே.
  • கல்வித்துறைகள் பல திறத்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் இயல்புக்குப் பொருந்தியதாகத் தோன்றும்.
  • அப்பொருந்திய ஒன்றில் சிறப்பு அறிவு பெறவும் பிறவற்றில் பொது அறிவு பெறவும் அவரவர் முயல்வது ஒழுங்காகும்.
  • தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமிருக்கிறாள்.
  • அவ்வெச்சரிக்கைக்கு மாணாக்கர் செவி சாய்த்து நடப்பாராக.
  • அறிவு விளக்கத்துக்கெனக் கல்வி பயின்று, அவ்வறிவை நாட்டுத் தொழில்துறைகளைப் புதிய முறைகளில் வளர்க்கப் பயன்படுத்துவாராக.

தாய்மொழி வழிக்கல்வி

  • நாம் தமிழ்மக்கள், நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை.
  • போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம். ஆனால் முதல் முதல் தாய் மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
  • தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது.

தமிழ்வழிக் கல்வி

  • தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே, சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகின்றனர்.
  • அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்துவிடுகிறார்.
  • அவை பின்னே பல மொழிகளில் மொழிபெயர்தது எழுதப்படுகின்றன.
  • அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது?
  • குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது.
  • கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.
  • தமிழ் வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
  • ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே. தமிழ்த்தாயை மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

இசைக்கல்வி

  • இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது.
  • இசைப்பாட இயற்கை சிலருக்குத் துணை புரியும், சிலருக்குத் துணை செவதில்லை.
  • இயற்கை துணை பெறாதவர் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.
  • பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.
  • தமிழ் யாழையும் குழலையும் என்வென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது.
  • கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறைச் செய்யுமாம். அந்த யாழ் எங்கே?
  • இனி இசைப் புலவர் தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை.
  • ஆகவே இசைத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்துவீராக.

நாடகக்கல்வி

  • நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன்.
  • இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்த போது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு.
  • இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை.
  • நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும்.
  • நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கர் அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக..

இயற்கை கல்வி

  • நீங்கள் ஏடுகளைப் பயில்வதுடன் நில்லாது. ஓய்ந்த நேரங்களில் இயற்கை நிலையங்களில் புகுந்து. இயற்கைக் கழகத்தில் நின்று. இயற்கைக் கல்வி பயினறால், இயற்கையோடியைந் வாழ்வு நடத்த வல்லவர்கள் ஆவீர்கள்.
  • சில மரங்கட்கு நீள் கிளையும் கிளிக்கு வளைந்த மூக்கும் யனைக்குத துதிக்கையும் மானிற்குக் கொம்பும் அமைந்திருப்பதற்கும் என்ன காரணம்? என்று சிந்தியுங்கள்.
  • இயற்கைக் கழகத்தில் பயின்றுபயின்று சங்கப்புலவர் இளங்கோ. திருத்தக்கதேவர். திருஞானசம்பந்தர், சேக்கிழார், பரஞ்சோதி, ஆண்டாள், கம்பர் முதலியோர் இயற்கைக் கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என்று ஆராயுங்கள்.
  • நந்தமிழ்க் காவியங்களும், ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் பேணுவதை உணர்வீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!