- குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை.
- ஆதலால் எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் குறுந்தொகை கருதப்படுகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்கள் உடையது.
- கடவுள் வாழ்த்து பாடலை சேர்த்து 402 பாடல்கள் உள்ளன.
- குறுந்தொகை பாடல்கள் நான்கடிச்(4) சிற்றெல்லையும் எட்டடிப் (8)பேரல்லையும் கொண்டது.
- குறுந்தொகையில் நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் மற்றும் 146வது பாடல் ஆகும்.
குறுந்தொகை சிறப்பு
- “நல்ல” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது குறுந்தொகை.
- ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனிதம் பேசிய சங்கக் கவிதையாய் திகழ்வது குறுந்தொகை.
- குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்.
- குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
குறுந்தொகை தொகுத்தவர் பதிப்பித்தவர்
- குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
- குறுந்தொகை நூலைத் 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் பதிப்பித்தார்.
குறுந்தொகை கடவுள் வாழ்த்து பாடியவர்
- குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ – 37 ஆவது பாடல்
- குறுந்தொகை நூலின் 37ஆவது பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
- ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ சேர மரபைச் சார்ந்த மன்னர்
- கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.
- தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த மனிதத்தை உணர்த்துகின்ற பாடல் 37ஆவது பாடல்.
வெள்ளி வீதியார் – 146ஆவது பாடல்
- சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர் வெள்ளிவீதியார்.
- வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்களை பாடியுள்ளார்.
- குறுந்தொகை நூலின் 146வது பாடலின் ஆசிரியர் வெள்ளிவீதியார்
- அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் சொல்லுகின்ற பாடல் 146ம்ஆவது பாடல்.
- திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றம் என்பதை வெள்ளிவீதியார் எழுதிய 146ஆவது பாடல் எடுத்துச் சொல்கிறது.
குறுந்தொகை – பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாலை திணை – இறைச்சி பாடல்
தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த பாடல்.
திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றம் என்பதை எடுத்துச் சொல்கிறது.
- திணை – பாலை
- துறை – பாலை துறை
- பாலை துறை – தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.
- குறிப்பு – இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது. *
பாடல்-37
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே.
– பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாடலின் பொருள்
தோழி தலைவியிட “தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருபான்.
பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற வழியில், பெண் யானையின் பசியைப் போக்க.
பெரிய கைகளை உடைய ஆண் யானை,மெல்லிய கிளைகளை உடைய யா மரத்தின் பட்டையை உரித்து
அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிபடுத்தும்
அந்த காட்சியைத் தலைவனும் காண்பான். அந்த காட்சி உன்னை அவனுக்கு நினைவுப்படுத்தும்
எனவே, அவன் விரைந்து உன்னை நாடி வருவான் வருந்தாது ஆற்றியிருப்பாயாக என்று கூறினாள்.
பாடலின் சுருக்கம்
- பேரன்பு உடையவன் பெரிதுனக்குத் தருவான் பொருள் தேடச் சென்றவன் பறந்தோடி வருவான் பசித்தீ அணைக்க மெல்லிய யாமரக் கிளையொடித்து உதவும் யானைக் காட்சியே உன் நினைவு தூவி இங்கவனை அழைத்துவரும். மலரினும் மெல்லியளே மனக்கவலை கொள்ளாதே.
சொல்லும் பொருளும்
- நசை – விருப்பம்
- பிடி – பெண் யானை
- யா – பாலை நில மரம்
- ஆறு – வழி
- நல்கல் – வழங்குதல்
- வேழம் – ஆண் யானை
- பொளிக்கும் – உரிக்கும்
குறுந்தொகை – வெள்ளி வீதியார்
குறிஞ்சித் திணை
அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும்
திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் சொல்லுகின்ற பாடல்.
திணை துறை – குறிஞ்சித் திணை *
- தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன் தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது. *
துறை விளக்கம்
தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றிப் பேச, சான்றோரை அனுப்புகிறான். தலைவி, அப்போது எங்கே தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ என்று கலங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தரப்பைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர் என்று தேற்றுகிறாள்.
பாடல் –146
அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்
கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்று நன்றென்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே.
– வெள்ளி வீதியார்
பாடலின் பொருள்
(இதற்கு முன்னர் ஊர் மக்களின் அவையில் பலமுறை பரிசுப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன.)
“தலைவி ! இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதிவர்கள் மூலமாகத் தலைவன்
போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து அவை முன் வைத்து மணம் பேசச் செய்துள்ளான். அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு, ‘நன்று நன்று’ என்று கூறி மகிழ்ந்தனர்.
நம்முடைய ஊரில் முன்பெல்லாம் பரிசத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைச் போதிய பரிசத் தொகை கிடைத்தவுடன் சேர்த்து வைப்போர் இருந்தனர் தானே?” என்று தோழி கூறுகிறாள்.
சொல்லும் பொருளும்
- தண்டு சிதவல் – ஊன்று கோல்
- சிதவள் – தலைப் பாகை
முந்தைய ஆண்டு வினாக்கள்
குறுந்தொகையின் அடிவரையறை (3 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) 8-16
(b) 13 -31
(C) 4-8
(D) 9-12
“செம்புலப் பெயல் நீர் போல” இவ்வரி இடம்பெறும் நூல் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) பரிபாடல்
(B) கலித்தொகை
(C) குறுந்தொகை
(D) அகநானூறு
“வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) குறுந்தொகை
(B) கலித்தொகை
(C) புறநானூறு
(D) பரிபாடல்
‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று’ என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
(A) நற்றிணை
(B) ஐங்குறுநூறு
(C)குறுந்தொகை
(D) அகநானூறு
எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல்கள்
(A) நற்றிணை, குறுந்தொகை
(B) அகநானூறு, புறநானூறு
(C) பரிபாடல், குறுந்தொகை
(D) குறுந்தொகை, புறநானூறு
“தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு நிலத்தைவிடப் பெரியது” – என்று கூறும் நூல்
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) கலித்தொகை
(D) அகநானூறு
‘நல்ல’ எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) ஐங்குறுநூறு
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B) கலித்தொகை
(C) குறுந்தொகை
(D) புறநானூறு
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
(A) பூரிக்கோ
(B) நல்லாதனார்
(C) கணிமேதாவியார்
(D) கார்மேகப்புலவர்
குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
(A) தேவ குலத்தார்
(B) விளம்பி நாகனார்
(C) பூரிக்கோ
(D) பெருந்தேவனார்
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
(A) 401
(B) 501
(C) 601
(D) 301
குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது?
(A) கலிப்பா
(B) வஞ்சிப்பா
(C) வெண்பா
(D) அகவற்பா
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
(A) சிலப்பதிகரம்
(B) அகநானூறு
(C) குறுந்தொகை
(D) புறநானூறு
“கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C) அகநானூறு
(D) புறநானூறு
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————