சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு பற்றி விவரித்து எழுதுக

சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு:

  • அரசு சாரா நிறுவனம் என்பது ஏழைகளின் நலனில் கவனம் செலுத்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், அடிப்படைச் சமூக சேவைகளை வழங்கும், சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் தனியார் நிறுவனமாகும்.
  • அரசு சாரா நிறுவனங்கள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.
  • இவை சங்கப் பதிவு சட்டம், 1860ல் பதிவு செய்யப்பட வேண்டும்.

சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு:

  • சமூக மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உதவி.
  • புகார் அளித்தல், ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துதல்
  • நிதி மேலாண்மை, வளங்களைத் திரட்டுதல், நிர்வாக நடைமுறை, நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு உதவுதல்.
  • சமூக சேவை தொடர்பான பிரச்சினைகளைக் கவனித்தல்.
  • மகளிர், குழந்தைகளின் தேவைகளை கவனித்தல்.
  • பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த சிக்கல்களை எழுப்புதல். பங்கெடுப்பு, சமூக திறன் மேம்பாடு மூலம் வளர்ச்சியை ஏற்படுத்தல், மாதிரிகளை உருவாக்குதல்.
  • மீட்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பங்கெடுப்பு.
  • விவசாயிகளின் திறன் கட்டமைப்பு, கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல்.
  • பாதுகாப்பான குடிநீருக்காக கிணறுகளை வெட்டுதல், கழிவறைகளை கட்ட ஊக்குவிப்பதன் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசி திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.
  • அரசின் சட்ட, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவது.
  • நிர்வாகத்தில் பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல்.
  • மனித உரிமைகளின் பாதுகாவலன்
  • கொடையாளிகளை ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில் கிடைக்கும் வளர்ச்சி நிதியை வளரும், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு வழங்குதல்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!