- சிற்பி பாலசுப்பிரமணியம் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
- ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
- சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழத்துறைத் தலைவராகப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்
- மலையாளம்
- கன்னடம்
- மராத்தி
- இந்தி
- ஆங்கிலம்
சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள கவிதைகள்
- சூரிய நிழல்
- ஒளிப்பறவை
- ஒரு கிராமத்து நதி
- சரப்ப யாகம்
- பூஜ்யங்களின் சங்கிலி
சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள உரைநடை நூல்கள்
- அலையும் சுவடும்
- மலையாளக் கவிதை
- இலக்கியச் சிந்தனைகள்
- சிற்பி பாலசுப்பிரமணியம் மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்கைளயும் தமிழில் மொழிபெயரத்துள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் பேராசிரியர், மொழிபெயர்பாளர், இதழாசிரியர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர்.
இளந்தமிழே! – சிற்பி பாலசுப்பிரமணியம்
- தமிழை போற்றும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்
- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
கவிதை
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!
தம் கைகள் அதனைப்போல் சிவந்து நோகத் தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம் **
விம்முகின்ற தோள் மீதில் முத்துமுத்தாய் வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட
எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்ற துணை வேறுண்டோ? இயம்பிடாயே!
மூண்டு வரும் கவிதை வெறிக்கு உணவாய் எங்கள் முத்தமிழே! நீ உள்ளாய்***
முன்னம் ஓர் நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்! பாரி முதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!
மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! **
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!
– சிற்பி பாலசுப்பிரமணியம்
முந்தைய ஆண்டு வினாக்கள்
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
(A) ஒளிப் பறவை
(B) சிரித்த முத்துக்கள்
(C) ஒரு கிராமத்து நதி
(D) நிலவுப் பூ