சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவங்கள்:
- புதியதாக தொழில் தொடங்கி அதை விரிவுப்படுத்த முயற்சி எடுப்பவரே தொழில் முனைவோர் என்று அழைக்கப்படுகிறார்.
- வளர்ந்து வரும் வேலையின்மை நிலையை சரிசெய்ய சுயவேலைவாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறிய அளவிலான வணிகம்:
- இது பெரிய அளவிலான வணிகத்தைவிட அதிக பலன்களை கொண்டுள்ளது.
- இதனை எளிதில் தொடங்கலாம் மற்றும் தொடங்குவதற்கு சிறிய அளவிலான மூலதன முதலீடே தேவைப்படுகிறது.
- சுற்றுச்சூழல் மாசுபாடு, சேரிகள் அதிகரிப்பு தொழிலாளர்களைச் சுரண்டுதல் போன்ற பெரிய அளவிலான வணிகங்களில் ஏற்படும் தீமைகள் இதில் இல்லை.
ஊதிய வேலை வாய்ப்பை விட சுயவேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை:
- வருவாய்க்கான எந்த வரம்புகளும் இல்லை.
- திறமையை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துதல்
- முடிவுகளை விரைவாகவும், தங்கள் வசதிக்கேற்பவும் எடுக்கலாம்.
தொழில் முனைவோர் என்ற உணர்வை வளர்த்தல்:
- தொழில் முனைவோர் புதிய தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி முறைகள் மற்றும் சந்தைபடுத்துதலில் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
- சுயவேலைவாய்ப்பு தொழில் முனைவோருக்கான ஒரு துவக்கம் ஆகும்.
- தனிப்பட்ட நபருக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துதல் எ.கா. தையல் தொழில், பழுதுபார்ப்பு பணிகள், இத்தகைய சேவைகளை தனிநபர்கள் எளிதில் தொடங்கலாம்.
- இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் சுயதொழில் மூலம் கலை மற்றும் கைவினைகளில் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். எ.கா. கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள்.
வேலையின்மை நிலையைக் குறைத்தல்
- வேலையின்றி இருப்பவர்களுக்கு சுயதொழில் இலாபகரமான தொழிலாக அமையும்.
- அரசுக் கொள்கைகள் மட்டும் திட்டங்களில் சுயதொழிலுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- தொழில் முனைவோர் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுவோரை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.