அரசும் சமூகமும்
சுல்தான்களின் அமைச்சர்கள்
வசீர் | பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் |
திவானி ரிஸாலத் | வெளியுறவு அமைச்சர் |
சுதர்-உஸ்-சாதர் | இஸ்லாமியச் சட்ட அமைச்சர் |
திவானி-இன்ஷா | அஞ்சல் துறை அமைச்சர் |
திவானி – அர்ஸ் | பாதுகாப்பு (அ) படைத்துறை அமைச்சர் |
காஸி-உல்-கஸாத் | நீதித்துறை அமைச்சர் |
இஸ்லாமியர் முக்கியத்துவம்
- இந்தியாவை வென்ற முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
- 1325இல் முகமது-பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார்.
- அவரே ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.