- தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த விருதானது கடந்த 2021 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
Contents show
தகுதிகள்:
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
- தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்.
- இந்த விருதை 2021 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது
- இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக பத்து லட்ச ரூபாய் காசோலையும் வழங்கப்படும்.
- 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு (96) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நல்லகண்ணு
- நல்லகண்ணு தனது 11வது வயதில் (1936) ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்.
- 1937 தேர்தலில் காங்கிரசில் பணியாற்றும் போது அவருக்கு வயது 12.
- 1944 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சென்னையில் ஜன சக்தியில் பணியாற்றத் தொடங்கினார்.
தகைசால் தமிழர் விருதுக்குரியவர் தேர்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த விருதுக்குரியவருக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.