14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல்
- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கென 14 இல்லங்களும், ஆண்களுக்கென 10 இல்லங்களும், இருபாலாரும் பயன்பெறும் வகையில் 7 இல்லங்கள் என 31 இல்லங்கள், தொழிற் பயிற்சி வசதிகள் மற்றும் தங்கும் வசதியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
சட்டக் கல்வி படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை
அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம்
- பிச்சைக்காரர் மறுவாழ்வு அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கத்தில் பிச்சைக்காரர்கள் சேர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறார்கள்.
அரசு மறுவாழ்வு இல்லங்கள்
- தொழுநோய் பிச்சைக்காரர்
- குற்றவியல் நீதிபதியால் தண்டிக்கப்பட்ட தொழுநோய் பிச்சைக்காரர்
- தொழுநோய் பிச்சைக்காரரின் கணவன் மனைவி தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பின் இந்த இல்லங்களில் மறுவாழ்வு பெற தகுதியுடையோர்
ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம்
இலவச கணினி பயிற்சி
- கணினி பயிற்சி சென்னை பூவிருந்தவல்லியிலுள்ள NIVHல் (National Institute for Visually Handicapped) பார்வையற்றவர்களுக்கான 6 மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகின்றது.
- இதன் மூலம் அவர்கள் சிறுதொழில் பிரிவு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ. 300 உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை
கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள்
கல்வி உதவித் தொகை
கல்வி உதவித் தொகை 1 முதல் 5 வரை (மற்றும்) 6 முதல் 8 வரை
கல்வி உதவித் தொகை 9 முதல் 12 வரை
காது கேட்கும் கருவிகள் மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரிகள்
- செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் உரையாடும் வண்ணம் காது கேட்கும் கருவி மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரியும் வழங்கப்பட்டு வருகிறது.