தமிழகத்தில் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் (Unemployed Youth Employment Generation Programme (UYEGP)) பற்றி எழுதுக

யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம்

  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
  • உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

வங்கிகள்

  • வணிக வங்கிகள்
  • அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
  • தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள்

கல்வித்தகுதி

  • குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம்.
  • வயது தகுதி – பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் மற்றும் மானியம்

  • ஆண்டு வருவாய் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். கடன் தொகையில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது.

தொழில்கள்

  • ரெடிமேடு ஆடை, பாக்கு மட்டை, டிஜிட்டல் பிரின்டிங், காலணி உற்பத்தி, ஹாலோ பிளாக் உற்பத்தி, லேத் பட்டறை, லேபிள் பிரின்டிங், கோன் வைண்டிங், நெட் சென்டர், விசைத்தறி, போட்டோ பிரேம் கடை, போட்டோ ஸ்டுடியோ, அழகு நிலையம், பர்னிச்சர் மற்றும் வாடகை பாத்திர கடை, டாக்ஸி, ஜெராக்ஸ், மொபைல் போன் சர்வீஸ், மளிகை கடை போன்ற தொழில்களுக்கு இந்த திட்டம் மூலம் உதவி வழங்கப்படுகிறது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!