தமிழ்நாட்டில் காந்தி

காந்தியடிகளின் தமிழ் தொடர்பு

  • காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியை கற்கத் தொடங்கினார்.
  • காந்தியடிகளைப் பெரிதும் கவர்ந்த நூல் திருக்குறள்.
  • தம்மைக் கவர்ந்த நூல் ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு என காந்தியடிகள் கூறினார்.

சென்னை இலக்கிய மாநாடு

  • சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று, 1937 ஆம் ஆண்டு நடைபெற்றது.
  • 1937ல் நடைபெற்ற சென்னை இலக்கிய மாநாடுக்கு தலைமை வகித்தவர் காந்தியடிகள்.
  • 1937ல் நடைபெற்ற சென்னை இலக்கிய மாநாடுக்கு வரவேற்புக்குழுத் தலைவராக உ.வே.சாமிநாதர் இருந்தார்.
  • “இந்தப் பெரியவரின் (உவே.சாமிநாதர்) அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் கூறினார்.

ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டம் காந்தி – பாரதியார் இராஜாஜி சந்திப்பு – 1919

  • 1919ல் ஆங்கில அரசு கடுமையான ரௌலட் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.
  • காந்தியடிகள் சென்னைக்கு 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த வந்தார்.
  • ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது.
  • ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை பற்றிய கருத்தாய்வுக் கூட்டத்தில் பாரதியார். இராஜாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரதியை பாதுகாக்க வேண்டுகோள்

  • திரு. காந்தி அவர்களே! நான் (பாரதியார்) இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” என்று பாரதியார் கேட்டார்.
  • தாங்கள் (காந்தியடிகள்) தொடங்கப்போகும் ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு என் (பாரதியார்) வாழ்த்துகள்” என்று காந்தியடிகளிடம் கூறினார் பாரதியார்.
  • “இவர் (பாரதியார்) எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று காந்தியடிகளிடம் பாரதியாரை பற்றிக் கூறினார் இராஜாஜி.
  • இவரைப் (பாரதியார்) பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று பாரதியாரை பற்றிக் கூறினார் காந்தியடிகள்.

மதுரை வருகை -ஆடையில் மாற்றம் – 1921

  • காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகைவண்டியில் மதுரைக்கு வந்தார்.
  • 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகளுக்கு உடை அணிவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் மதுரை.
  • மதுரைக்கு புகைவண்டியில் செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

ஆலய நுழைவு போராட்டம்

  • எல்லா மக்களுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தார் காந்தியடிகள்.

குற்றால அருவியில் நீராட மறுப்பு

  • குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது.
  • கோவில் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது.
  • இதனால் காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

காரைக்குடி சுற்றுப்பயணம்

  • காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
  • காரைக்குடி சுற்றுப்பயணத்தின் போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் தங்கினார்.
  • காந்தி தங்கிய அன்பர் வீடு ஆடம்பரமாக வெளிநாட்டு பொருள்கள் நிறைந்து இருந்தன.
  • கானாடுகாத்தான் அன்பரிடம், “உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும். இதைவிட அழகாகச் செய்துவிடுவேன்” என்று காந்தியடிகள் கூறினார்.
  • அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.

காந்தியடிகள்

  • காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
  • பெண்கள் முன்னேற்றம். சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் பாடுபட்டார்.
  • எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!