தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

  • தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது.
  • தமிழ்நாட்டுக் காங்கிரசில் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையே ஆழமானப் பிரிவு இருந்தது.
  • வ.உசிதம்பரனார். V.சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது. 
  • மக்களின் நாட்டுப் பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • தொடக்கத்தில் இவ்வியக்கம் பெருமளவில் வங்கப்பிரிவினைக்கு எதிரான எதிர் வினையாகவே இருந்தது.
  • ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றுவதென்பதிலிருந்து வட்டார மொழியில் சொற்பொழிவு நிகழ்த்துவது என ஏற்பட்ட மாற்றம் இக்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
  • பொது இடங்களில் ஐரோப்பியர்கள் மாணவர்களால் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கத்துடன் வாழ்த்தப்பட்டனர். 
  • 1907 இல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின.

வ.உ.சி-யின் பங்கு

  • 1905 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினை இவரை அரசியலில் ஈடுபடச் செய்தது.
  • 1907ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். 
  • வ.உ.சி. பாலகங்காதர திலகரை ஆதரித்தார்.
  • ‘சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம்’ மற்றும் ‘சுதேசி கூட்டுறவு அங்காடிகளை’ தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
  • சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்து, தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • தூத்துக்குடி அருகில் பவள ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். 

சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்

  • 1906 இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (Swadeshi Steam Navigation Company – SSNC) எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
  • மொத்த முதலீடான ரூ.10 லட்சம் 40,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு ரூ.25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.
  • அரவிந்த கோஷும் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார். 
  • பாண்டித்துரையும்,ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்களில் இருவராவர்.
  • சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
  • காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார். இருந்தபோதிலும் ஐரோப்பியக் கம்பெனியின் முறையற்ற போட்டியினாலும் அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்சமான போக்கினாலும் வ.உ.சியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம்

  • 1907 இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருவரும் துாத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினார்.
  • 1908 இல் கோரல்மில் தொழிலாளர்களின் வேலை, மோசமான வாழ்க்கைச் சூழல்கள் வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது.
  • தொடர்ந்து வந்த சிலநாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினர்.
  • அவ்வுரைகளால் தூண்டப்பெற்று கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் மார்ச் 1908 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  • இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்ககால வேலை நிறுத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.
  • வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் இவ்வெற்றியை வாழ்த்தின. இவ்வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னாதமான முதல் அடியாகும். இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைந்த வெற்றி…” என அரவிந்த கோஷின் வந்தே மாதரம் புகழாரம் சூட்டியது.

வ.உ.சி, சுப்ரமணிய சிவா கைதும் சிறை வாசமும்

  • பிபின் சந்திர பால் 1907 மார்ச் 9 இல் விடுதலை செய்யப்பட்டார். அந்நாலை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் ‘சுதேசி தினமாக’ திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர்.
  • 1908 ஜூலை 7 இல் வ.உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
  • தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. 
  • இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
  • காவல்நிலையம், நீதிமன்றம், நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.
  • சுதேசமித்திரன் தேசியவாதிகளின் செயல்பாடுகள் குறித்து குறிப்பாக வ.உ.சி துாத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டது.
  • சிறையில் வ.உ.சி கடுமையாக நடத்தப்பட்டதோடு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
  • கைது செய்யப்பட வேண்டியவர்களில் G.சுப்பிரமணியர், சுரேந்திரநாத் ஆர்யா ஆகியரோர் இடம் பெற்றிருந்தனர்.
  • சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார்.
  • பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்தகோஷ், V.V.சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர்.
  • சுதேசி இயக்கத் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான அடக்குமுறை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை ஓர் முடிவுக்குக் கொண்டு வந்தது.

சுப்பிரமணிய பாரதியாரின் பங்களிப்பு

  • 1907ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தகோஷுடன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
  • திலகரின் Tenets of New Party எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார். மேலும் 1907ல் ‘சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறிந்து’ எனும் சிறு புத்தகமொன்றை வெளியிட்டார்.
  • அவரது பாடல்களான வந்தே மாதரம், அச்சமில்லை அச்சமில்லை, எந்தையும் தாயும், ஜெயபாரதம் போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • 1908ல் சென்னையில் சுயராஜ்ய தினத்திற்காக பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார்
  • 1908 ஆம் ஆண்டு, வ.உ.சிக்கு எதிராக ஆங்கில அரசு தொடர்ந்த வழக்கில் வ.உசி. க்கு ஆதரவாக சாட்சி வழங்கினார். இதனால் ஆங்கில அரசு இவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது.
  • எனவே பாரதியார் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந் து புதுவைக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து தினசரி, வார இதழ் மற்றும் மாத இதழ்களில் தனது படைப்பினைத் தொடர்ந்து வெளியிட்டார்.
  • ஆனால் ஆங்கில அரசு 1909 ஆம் ஆண்டு பாரதியின் படைப்புகளுக்கு தடை விதித்தது.

வாஞ்சிநாதனின் பங்களிப்பு

  • திருநெல்வேலி நிகழ்வுக்குப் பழி வாங்குவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது.
  • செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் பாரத் மாதா இயக்கத்தால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார். 
  • அவர் 1911 ஜூன் 17 ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.Eஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார்.
  • வாஞ்சிநாதன் இறந்தபின் அவர் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில், ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும் என்று எழுதப்பட்டிருந்தது.
  • விசாரணையின் போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவாய் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும் ஏனையோரும் நெருக்கமாக இருந்து இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ஆங்கில அரசு மெய்பித்தது.
  • பாண்டிச்சேரி குழுவினர் குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் காலனிய அரசு பெரும் சந்தேகம் கொண்டது.
  • கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல்வேகம் குறைந்து, மந்த கதியிலான ஒரு காலகட்டத்தை எதிர் கொண்டது.
  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தையொட்டி அது ஒருவகையான புத்துயிர்ப்பைப் பெற்றது.

சுதேசி இயக்கத்தின் வீழ்ச்சி 

  • அரசின் கடுமையான அடக்குமுறை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907) வெடி மருந்துச் சட்டம் (1908) செய்தித்தாள் சட்டம், (1908) ஆகியவற்றை இயற்றியது
  • சூரத் மாநாட்டில் காங்கிரஸாரிடையே காணப்பட்ட பிளவு அவர்கள் ஒற்றுமையின்மையை பிரிட்டிஷாருக்கு காட்டிவிட்டது. அவ்வொற்றுமையின்மையை பயன்படுத்தி பிரிட்டிஷார் போராட்டத்தை முழுவீச்சில் அடக்கவே முனைந்தனர்.
  • பொதுமக்களிடையே பங்கு அதிகமாக இருந்தபோதிலும் மத்திய தரவர்க்கத்தினரைப் போல் விவசாயிகள் இதில் அதிக அளவு கலந்து கொள்ளவில்லை.
  • இந்து மத நம்பிக்கைகளால் முலாம் பூசப்பட்டு வலியுறுத்திச் சொல்லப்பட்ட தேசப்பற்றை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • 1908 முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது. 1907 இல் ஏற்பட்ட சூரத் பிளவு அதன் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணமாகும்
  • சுதேசி இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஆங்கிலேய ஆட்சி அடக்கியது. முக்கிய தலைவர்கள் சிறைகளில் நீண்ட காலத்துக்கு அடைபட்டார்கள்: புரட்சியாளர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது

மிண்டோ பிரபுவின் அடக்குமுறை சட்டங்கள்

  • செய்தித்தாள் சட்டம், (1908) இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது.
  • குற்றம் செய்யத் தூண்டுதல் குற்றச் சட்டம்(1908)
  • இந்தியப்பத்திரிக்கைச் சட்டம் (1910) அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாயமாக்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!