திராவிட மொழிக்குடும்பம்

மொழிகளின் காட்சிச் சாலை

  • பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மொழிக்குடும்பங்கள்

  • உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, அமைப்பு, தொடர்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளை (நான்கு) 4 மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை,
  1. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  2. இந்தோ ஆசிய மொழிகள்
  3. சீன-திபெத்திய மொழிகள்
  4. திராவிட மொழிகள்

திராவிட நாகரிகம்

  • உலகின் பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று.
  • மொகஞ்சதாரோ ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகங்களை அறிஞர்கள் திராவிட நாகரிகம் என்று கருதுகின்றனர்.

திராவிட மொழி

  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்.
  • திராவிடா மொழி மாற்றத்தைத் ஹீராஸ் பாதிரியார் விளக்குகின்றார்.
  • ஹீராஸ் பாதிரியார் விளக்குகின்ற மொழி மாற்றம்
    • தமிழ் – தமிழா – தமிலா- டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா-திராவிடா
  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.
  • தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மொழி ஆய்வு

  • 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழ். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை என்ற கருத்து அறிஞர் பலரிடையே நிலவி வந்தது.

வடமொழி – வில்லியம் ஜோன்ஸ்

  • வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்.

பாப், கிரிம், ராஸ்க்

  • 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், கிரிம், ராஸ்க், முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தனியொரு மொழிக்குடும்பம் பிரான்சிஸ் எல்லிஸ்

  • தமிழ். தெலுங்கு. கன்னடம். மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் முன்வைத்தார்.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பிரான்சிஸ் எல்லிஸ் பெயரிட்டார்.
  • இதனையொட்டி தோடா, மால்தோ, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழியன் – ஆரிய மொழி ஹோக்கன் மாக்ஸ் முல்லர்

  • தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் மொழிகளை இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டார் ஹோக்கன்.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம். மாலதோ, தோடா, கோண்டி அகிய பொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்று ஹோக்கன் என்பார் என்றும் கருதினார்.
  • மாக்ஸ் முல்லரும் ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட மொழி – கால்டுவெல்

  • 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.
  • திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார் கால்டுவெல்.
  • தமிழ் வடமொழியின் மகளன்று. அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி, தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.

– கால்டுவெல்

கால்டுவெல்லுக்குப் பின்னர்

  • கால்டுவெல்லுக்குப் பின்னர் திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்கள்
    • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
    • எல். வி. இராம சுவாமி
    • கே.வி. சுப்பையா
    • ஆந்திரனோவ்
    • எமினோ கமில் சுவலபில்
    • பரோ
    • ஸ்டென்கனோ

திராவிட மொழிக்குடும்பம்

  • திராவிட மொழிக்குடும்பம். மொழிகள் பரவிய நில அடிப்படையில் (மூன்றாக) 3 வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • வடதிராவிட மொழிகள்
    • நடுத்திராவிட மொழிகள்
    • தென் திராவிட மொழிகள்
  • திராவிட மொழிக்குடும்பத்தில் 24 மொழிகள் உள்ளன.
  • தற்போது திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.
  • 24 மொழிகள் தவிர அண்மையில் (நான்கு) 4 மொழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை
    • தங்கா
    • குறும்பா
    • எருகலா
    • சோழிகா

வட, நடு, தென் திராவிட மொழிகள்

  • பிராகுயி – வடதிராவிட மொழிகள்.
  • தெலுங்கு – நடுத்திராவிட மொழிகள்
  • தமிழ், கன்னடம், மலையாளம் – தென் திராவிட மொழிகள்

வட திராவிடம்

  • மாலத்தே
  • குரூக்
  • பிராகுய் (பிராகுயி)

நடு திராவிடம்

  • தெலுங்கு
  • நாய்க்கி
  • பர்ஜி
  • பெங்கோ
  • கதபா
  • கோலாமி (கொலாமி)
  • கோண்டா
  • கோண்டி
  • மண்டா
  • கூவி (குவி)
  • கோயா
  • கூயி

தென் திராவிட

  • கோத்தா
  • கொரகா
  • துளு
  • குடகு (கொடகு)
  • தோடா
  • இருளா
  • கன்னடம்
  • மலையாளம்
  • தமிழ்

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்

  • சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர் சொல், அடிச்சொல் எனப்படும்.
  • திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

அடிச்சொற்கள்

அடிச்சொல் – திராவிட மொழிகள்

  • ஃகன் – குரூக்
  • கெண் – பர்ஜி
  • கொண் – தோடா
  • கன்னு – தெலுங்கு, குடகு
  • கண்ணு – கன்னடம், மலையாளம்
  • கண் – தமிழ்

குறில், நெடில் வேறுபாடு

  • திராவிட மொழிகளில் பொருளை வேறுபடுத்த உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் துணை செய்கின்றன.
    • அடி – குறில்
    • ஆடி – நெடில்
    • வளி – குறில்
    • வாளி – நெடில்

எண்ணுப் பெயர்கள்

  • திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

எண்ணுப் பெயர்கள்

  • மூஜி – துளு
  • மூரு – கன்னடம்
  • மூடு – தெலுங்கு
  • மூணு – மலையாளம்
  • மூன்று – தமிழ்

பால் பாகுபாடு

திராவிட மொழிகளில் பால் பாகுபாடு

  • திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு அமைந்துள்ளது.
  • திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.
  • அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை.
  • தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர்.

எ.கா.

  • கடுவன் – மந்தி
  • களிறு – பிடி

தமிழின் தனித்தன்மைகள்

  • தமிழ், பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.
  • இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு, தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.

பணத்தாள்களில் தமிழ்மொழி

  • மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!