திருஞானசம்மந்தர்

திருமயிலை (மயிலாப்பூர்) கோயில் பங்குனி உத்திர விழா

இரண்டாம் (2ம்) திருமுறை

பாடல் – 7

மலி விழா வீதி மட நல்லார் மாமயிலைக் கலி விழாக் கண்டான் கபாலீச் சரம மர்ந்தான்*

பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்தர நாள் ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடலின் பொருள்

  • பூம்பாவாய்! இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய ஊர் திருமயிலை.
  • திருமயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பூசையிடும் பங்குனி உத்தர ஆரவார விழாவினைக் காணாது செல்வது முறை ஆகுமோ?

சொல்லும் பொருளும்

  • மட நல்லார் – இளமை பொருந்திய பெண்கள்
  • மலி விழா – விழாக்கள் நிறைந்த
  • கலி விழா – எழுச்சி தரும் விழா
  • பலி விழா  – திசைதோறும் பூசையிடும் உத்திர விழா
  • ஒலி விழா – ஆரவார விழா

மயிலாப்பூர் சிறப்புகள்

  1. ஊர் திரை வேலை உலாவும்
  2. மடலார்ந்த தெங்கின் – மயிலை
  3. இருள் அகற்றும் சோதித் – மயிலை
  4. மங்குல் மதி தவழும் மாட வீதி – மயிலாப்பூர்
  5. கண்ணார் மயிலைக் – கபாலீச்சரம்
  6. கருங்சோலை சூழ்ந்த – கபாலீச்சரம்
  7. கற்றார்கள் ஏத்தும் – கபாலீச்சரம்

மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்

  1. தை – தைப்பூச விழா
  2. மாசி – கடலாட்டு விழா
  3. பங்குனி – பங்குனி உத்திர விழா
  4. ஐப்பசி – ஓண விழா
  5. கார்த்திகை – விளக்குத் விழா
  6. மார்கழி – திருவாதிரை விழா

முந்தைய ஆண்டு வினாக்கள்

திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
(A) உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
(B) 220 தலங்கள் வழிப்பட்டார்
(C) திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
(D) அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்

பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
(A) திருநாவுக்கரசர்
(B) திருஞானசம்பந்தர்
(C) சுந்தரர்
(D) காரைக்கால் அம்மையார்

பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவர்
(A) அப்பர்
(B) சுந்தரர்
(C) திருஞானசம்பந்தர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை

தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
(A) சுந்தரர்
(B) திருஞானசம்பந்தர்
(C) அப்பர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை

ஆதிசங்கரர் இவரைத் திராவிட சிக’ என்றார்
(A) திருநாவுக்கரசர்
(B) திருஞானசம்பந்தர்
(B) திருமழிசையாழ்வார்
(D) திருப்பாணாழ்வார்

தவறான தொடரை தேர்ந்தெடு
(A) சூலை நோயால் ஆட் கொள்ள பெற்றவர் -அப்பர்
(B) மணக்கோலத்தில் ஆட் கொள்ள பெற்றவர் – சுந்தரர்
(C) திருவெண்ணைய் நல்லூரில் ஆட் கொள்ளப் பெற்றவர் – சம்பந்தர்
(D) திருப்பெருந்துறையில் ஆட் கொள்ளப் பெற்றவர் – மாணிக்கவாசகர்

 

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!