Contents show
பிரிட்டிசாரின் நாடுபிடிக்கும் கொள்கைகள்
துணைப்படைத்திட்டம்
- கம்பெனியின் எல்லைகளை விரிவுபடுத்தவும் இந்தியாவில் அதன் ஆதிக்கத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தை வெல்லெஸ்லி பிரபு கொண்டு வந்தார்.
- இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் “பாதுகாக்கப்பட்ட அரசுகள்” என அழைக்கப்பட்டன. இந்நாடுகள் வெளி மற்றும் உள்நாட்டு போர்களில் கம்பெனி இராணுவத்தால் பாதுகாக்கப்படும்.
- பாதுகாக்கப்பட்ட அரசுகள் தங்களது சொந்த ராணுவத்தை கலைத்துவிட்டு பிரிட்டிசாரின் இராணுவத்தை நிலையாக்கி கொள்ளவேண்டும்.
- பிரிட்டிசாரின் இராணுவத்தை பராமரிக்கும் செலவினை பாதுகாக்கப்பட்ட அரசு பார்த்துக்கொள்வதோடு குறிப்பிட்ட தொகையை ஆண்டு வருவாயாகவோ அல்லது நாட்டின் ஒரு பகுதியை பிரிட்டீசாருக்குத் தந்துவிட வேண்டும்.
- இராணுவத்தின் அனைத்து அதிகாரிகளையம் நியமிக்கும் அதிகாரம் கம்பெனிக்கு மட்டுமே உண்டு.
- கம்பெனியிடம் அனுமதியின்றி போர் அறிவிக்கவோ அல்லது உடன்படிக்கை செய்து கொள்ளவோ கூடாது.
- ஆங்கிலேயர் அல்லாத மற்ற ஐரோப்பியர்களை நாடுகளிலிருந்து வெளியேற்றுவதோடு கம்பெனியின் அனுமதியின்றி எவ்வித உடன்படிக்கையும் செய்ய இயலாது.
- 1798-ல் இத்திட்டத்தில் ஹைதராபாத் முதன்முதலில் இணைந்தது. பின் 1799-ல் தஞ்சாவூரும், 1801-ல் அயோத்தியும், 1802-ல் பேஷ்வாவும், 1804-ல் குவாலியரும் இணைந்தனர்.
நன்மைகள்
- இந்திய அரசுகளின் செலவில் ஆங்கிலேயர்கள் தங்களது இராணுவத்தை பராமரிக்க உதவியது.
- மற்ற ஐரோப்பியர்களின் குறிப்பாக பிரெஞ்சுகாரர்களின் மறு எழுச்சியை இந்தியாவில் இது தடுத்து நிறுத்தியது.
- இந்திய சிற்றரசுகளின் வெளிநாட்டு கொள்கைகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்த உதவியது.
தீமைகள்
- இத்திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள் தங்கள் இறையாண்மையை இழந்தனர்.
- தற்காத்துக்கொள்ளும் உரிமையை இந்நாடுகள் இழந்தன.
- பாதுகாக்கப்பட்ட அரசுகள் இராணுவ பயிற்சி அளிக்கும் அதிகாரத்தை இழந்தன.
வாரிசு இழப்புக் கொள்கை:
- இத்திட்டம் 1848ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி ஆண் வாரிசு இல்லாத அரசர் தத்தெடுத்துக் கொண்டு தனது வாரிசாக அறிவிக்கும் உரிமை இருந்தது.
- ஆனால் இப்புதிய கொள்கை தத்தெடுக்கப்பட்ட ஆண் வாரிசுக்கு சொத்துரிமை மட்டும் அளித்ததோடு ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது.
- 1848ல் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட முதல் அரசு சதாரா ஆகும். பின் 1849ல் ஜெய்பூரும், 1853ல் ஜான்சியும், 1854ல் நாக்பூரும் இத்திட்டத்தின் கீர் இணைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் விளைவாக மத்திய மாகாணத்தின் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் வந்தது.
- 1857 பெரும் கலகத்திற்கு முக்கிய காரணங்கள் ஒன்றாக இந்நிகழ்வு திகழ்ந்தது.
முறையற்ற ஆட்சிமூலம் இணைப்பு
- வாரன்ஹாஸ்டிங்ஸ் முதல் பல தலைமை ஆளுநர்கள் அயோத்தியின் நிர்வாகத்தை சீரமைக்க நவாப்களிடம் அறிவுறுத்தி வந்தனர்.
- ஆனால் ஆங்கிலேயரிடம் கொண்டிருந்த விசுவாசத்தினால் அயோத்தியை ஆங்கிலேயர் இணைத்துக் கொள்ளமாட்டார்கள் என எண்ணி எவ்வித சீர்திருத்தத்தையும் நவாப்கள் மேற்கொள்ளவில்லை. S
- ஆனால் 1856ல் டல்ஹௌசி பிரபு முறையற்ற ஆட்சி எனக் கூறி அயோத்தியை கம்பெனியின் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்ததோடு நவாப் வாஜித் அலிக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.
- இவ்விணைப்பு உயரிய இஸ்லாமியர்களையும் சிப்பாய்களையும் கோபப்படுத்தியது. ஏனெனில் பிரிட்டீசாரின் இந்தியப் படையில் பெரும்பங்கு சிப்பாய்கள் அயோத்தியை சேர்ந்தவர்கள். இவ்விணைப்பிற்கு பின் அயோத்தியில் சிப்பாய்கள் கொண்டிருந்த உயரிய நிலை கீழ் சென்றது.
- 1857ல் பெரும் கலகத்திற்கு இதுவும் காரணமாக அமைந்தது.