நாட்டுப்புறப் பாட்டு
- உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
- காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் என்பர் **
- நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை சு. சக்திவேல் தொகுத்துள்ளார்.
- நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
- முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல்களை (எட்டு) 8 ஆக பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.
தாலாட்டு பாட்டு
- வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு.
- தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது.
- குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
தொழில் பாட்டு
- மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அசதியைப் போக்குகிறது பாடல்
- உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள்.
- வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் பாடல்.
- நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல் பெறுதல் ஆகிய உழவுத்தொழில்களைப் பற்றிய பாடல்
வரலாற்றுக்கதை பாடல்
- நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்று கதைபாடல்
- கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் – கதைபாடல் ஆகும்.
- சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதை பாடல், புராணக்கதைப் பாடல் எனப் கதைபாடல் பலவகைப்படும்.
- வீர்பாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் ஒரு வரலாற்றுக்கதை பாடல் ஆகும்.
பஞ்சக்கும்மி பாட்டு
- நாட்டில் பொரும் பஞ்சம் காலங்களில், மக்கள் ஏற்பட்ட துயரங்களை பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்
- பாடல்களாகப் புலவர்கள் பாடினர். இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
- கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து, இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன்
- கோணக்காத்துப் பாட்டு புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
- அதிலிருந்து பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
வழிபாடு பாட்டு – மழைச்சோற்று நோன்பு
- சிற்றூர் மக்கள் மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாதச் சோற்றை ஒரு பானையில் வாங்கி ஊர்ப் பொது இடத்தில் சேர்த்து அனைவரும் பகிர்ந்து உண்பர்
- கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கொண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வே மழைச்சோற்று நோன்பு என்பர்