பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

துன்பம் வெல்லும் கல்வி அறிமுகம்

  • “சுல்வி அழகே அழகு” என்பர் பெரியோர்.
  • கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி,
  • கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும்.
  • எவ்வளவு தான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும்.
  • பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும்.
  • எனவே, படிப்போம்! பண்பாட்டோடு நிற்போம்! பார் போற்ற வாழ்வோம்!

துன்பம் வெல்லும் கல்வி – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • எவ்வளவு தான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் கல்வி பயனற்றுப் போகும்.

கவிதை

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே

நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது

பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது

தன்மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்

நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்

அறிவு வளர்ச்சியிலே வான் முகட்டைத் தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றி வர விருது வர பெருமை

மேதைகள் சொன்னது போல் வர விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும்

நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்ளோடு வாழ்ந்திட வேண்டும்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சொல்லும் பொருளும்

  • தூற்றும்படி – இகழும்படி
  • மேதைகள் – அறிஞர்கள்
  • நெறி – வழி
  • மூத்தோர் – பெரியோர்
  • மாற்றார் – மற்றவர்
  • வற்றாமல் – குறையாமல்

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) அழ. வள்ளியப்பா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
“உச்சி மலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை யில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது” – என்று பாடியவர்
(A) கண்ணதாசன்
(B) அ. மருதகாசி
(C) உடுமலை நாராயண கவி
(D) பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர்
(A) புரட்சிக் கவிஞர்
(B) உவமைக் கவிஞர்
(C) மக்கள் கவிஞர்
(D) இயற்கைக் கவிஞர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!