பாளையக்காரர்கள் – புலித்தேவர் & வேலுநாச்சியார்

பாளையக்காரர்கள் 

பாளையக்காரர் முறையின் தோற்றம்

  • இம்முறை காகாதிய வம்சத்தின் அரசர் பிரதாபருத்ரன் அறிமுகப்படுத்தப்பட்டது. என்பவரால்
  • இம்முறை தமிழ்நாட்டில் 1529ல் மதுரையின் ஆட்சியாளர் விஸ்வநாத நாயக்கரால் அவரின் அமைச்சர் பெரியநாதரின் உதவியோடு கொண்டுவரப்பட்டது.
  • பாளையம் என்பது ஒரு பாசறை அல்லது பெரும் நிலப்பரப்பை குறிப்பிடுவது ஆகும்.
  • தமிழ்நாட்டில் 72 பாளையக்காரர்கள் இருந்தனர்.
  • வருவாயில் 1/3 பங்கு நாயக்கர்களுக்கும், 1/3 பங்கு இராணுவ பராமரிப்பிற்கும் மீதம் பாளையக்காரர்களுக்கும் என பிரித்துக்கொள்ளப்பட்டது.
  • பாளையம் இரண்டு பிரிவுகளாக இருந்தது.
  1. கிழக்கு பாளையங்கள்: தெலுங்கு பேசும் பாளையங்கள், நாகலாபுரம், பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம், சாத்தூர் போன்றவை.
  2. மேற்கு பாளையங்கள்: தமிழ் பேசும் மறவர் பாளையக்காரர்கள் நெற்கட்டும் சேவல், ஊத்துமலை, சிங்கம்பட்டி தலைவாய்க் கோட்டை, நடுவக்குறிச்சி.

புலித்தேவரின் கிளர்ச்சி: (1759 – 1761)

  • நெற்கட்டும் செவலின் பாளையக்காரர் புலித் தேவர். மேற்கு பாளையத்தை சேர்ந்தவர்.
  • இவர் ஆற்காடு நவாப் முகமது அலிக்கும் கம்பெனிக்கும் வரி செலுத்த மறுத்தார்.
  • முகமது அலி தனது அண்ணன் மாபஸ்கானையும் கர்னல் ஹெரான் என்பவரையும் அனுப்பி மதுரையை 1755ல் கைப்பற்றினார்.
  • மதுரையைக் கைப்பற்றிய பின்பு நெற்கட்டும் செவலை அவர்கள் கைப்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் போதிய படை இல்லாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
  • இதனால் புலித்தேவர் நவாப் மற்றும் கம்பெனிக்கு எதிராக கூட்டமைப்பை ஏற்படுத்தலானார்.
  • நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மின்னா, முடிமைய்யா மற்றும் நபிகான் கட்டாக் ஆகியோரோடு சிவகிரி, எட்டையபுரம், பாளையங்களும் கூட்டமைப்பில் இணைந்தனர்.
  • மராத்தியர்களுடனான போரில் ஈடுபட்டிருந்ததால் ஹைதர் அலியால் புலித்தேவருக்கு உதவ படையை அனுப்ப முடியவில்லை.

களக்காடு போர் 1761

  • புலித்தேவரின் கூட்டமைப்பிற்கு எதிராக மாபஸ்கானின் தலைமையின் கீழ் நவாப் மற்றும் கம்பெனியின் படை அனுப்பப்பட்டது.
  • களக்காடு எனுமிடத்தில் நடைபெற்ற போரில் புலித்தேவர் நவாப் படையை தோற்கடித்தார்.
  • பிரிட்டிஷ் படையை வென்ற முதல் இந்தியர் புலித்தேவர் ஆவார்.
  • 1761ல் கம்பெனியின் யூசுப்கான் (கான்சாகிப் அல்லது மருதநாயகம்) என்பவரால் நெற்கட்டும் செவல், பனையூர் மற்றும் வாசுதேவநல்லூர் கைப்பற்றபட்டது.
  • கம்பெனியின் அனுமதி இல்லாமல் பாளையக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதால் தேசதுரோக குற்றச்சாட்டில் யூசுப்கான் தூக்கிலிடப்பட்டார்.
  • இதைப் பயன்படுத்தி புலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764ல் கைப்பற்றினார்.
  • ஆனால் 1767ல் கேப்டன் கேம்பல் என்பவரால் நெற்கட்டும் செவல் கம்பெனியின் வசமானது. புலித்தேவர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து இறந்தார்.

ஒண்டிவீரன்

  • புலித் தேவரின் ஒரு படையை வழிநடத்தி பிரிட்டிஸாரை வென்றார்.
  • போரில் தன் ஒரு கையை இழந்ததை பிரிட்டிஸிற்கு எதிரான போரின் சன்மானம் என ஏற்றுக்கொண்டார்.

யூசுப்கான்

  • பிறந்த இடம்: இராமநாதபுரம் இயற்பெயர் மருதநாயகம்
  • சாதிய முறைக்கு எதிராக பாண்டிச் சேரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
  • 1756 முதல் 1761 வரை மதுரை மற்றும் திருநெல்வேலியின் ஆளுநராக செயல்பட்டார்.
  • ஹைதர் அலியை தோற்கடித்து சோழவந்தானை கைப்பற்றினார்.
  • மதுரையில் துணி நெய்யும் நிறுவனங்களை ஊக்குவித்தார்.
  • பல கோயில்களுக்கு தானம் வழங்கியதோடு கோயில் நிலங்களை மீட்டார்.
  • 1764ல் தேசதுரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார்.

வேலுநாச்சியார்:

  • பிறப்பு: இராமநாதபுரம்
  • தந்தை: இராமநாதபுர சேதுபதி ராஜா செல்லமுத்து
  • கணவர்: சிவகங்கை ராஜா முத்துவடுகநாதர்
  • மகள்: வெள்ளச்சி நாச்சியார்
  • 1772ல் நவாப் மற்றும் கம்பெனியின் படை, கர்னல் போன்ஜோர் என்பவரின் கீழ் சிவகங்கையை தாக்கியது.

காளையார் கோவில் போர் (1772)

  • இப்போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டு சிவகங்கை பிரிட்டிஷ் வசம் வந்தது. வேலுநாச்சியார் தன் மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி பாளையத்தில் அடைக்கலம் புகுந்தார்.
  • விருப்பாச்சி பாளையத்தின் தலைவர் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் சிவகங்கையை கைப்பற்ற முயற்சிசெய்தார்.
  • ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி அவரிடம் படை உதவியைப் பெற்றார்.
  • 1780ல் ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கரின் உதவியில் சிவகங்கையை மீட்டு மருது சகோதரர்களால் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
  • வேங்கன் பெருவுடையார் வெள்ளச்சி நாச்சியாரை மணந்து சிவகங்கை ராஜாவாக மாறினார்.
  • 1790ல் வெள்ளச்சி நாச்சியாரின் மரணத்தால் பாதிக்கப்பட்டு 1796ல் வேலுநாச்சியார் மரணமடைந்தார்.
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முதல்பெண் வேலுநாச்சியார் ஆவார். இவர் வீரமங்கை அல்லது தென்னக ஜான்சி ராணி எனப்படுகிறார். ஜான்சி,

கோபாலநாயக்கர்

  • விருப்பாச்சி பாளையத் தலைவரான இவர் பாளையக்காரர்கள் புரட்சியில் திண்டுக்கல் பாளையம் கூட்டமைப்பினை தலைமை தாங்கி நடத்தினார்.
  • திண்டுக்கல் கூட்டமைப்பில் இவரோடு மணப்பாறை பாளையத் தலைவர் லட்சுமி நாயக்கர் மற்றும் தேவதானப்பட்டி பாளையத்தின் தலைவர் பூஜை நாயக்கரும் இணைந்தனர்.
  • திப்புசுல்தானால் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷிற்கு எதிராக கோயம்புத்தூரிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தார். பின்பு கட்டபொம்மனின் சகோதரர் ஊமத்துரையுடன் இணைந்து போரிட்டார்.
  • விவசாயிகளின் ஆதரவோடு ஆனைமலை பகுதியில் போரிட்டார்.
  • ஆனால் 1801ல் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டார்.

குயிலி

  • வேலு நாச்சியாரின் தோழியான குயிலி, உடையாள் எனப்பெயரிடப்பட்ட பெண்படையை வழிநடத்தினார்.
  • 1780ல் பிரிட்டிஷின் ஆயுதக்கிடங்கினுள் நுழைந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்தார்.

உடையாள்

  • வேலுநாச்சியாரைப் பற்றி தகவல்தர மறுத்ததால் கம்பெனி படையால் கொல்லப்பட்ட ஆடுமேய்க்கும் பெண் உடையாள் ஆவார்.
  • இவரின் தியாகத்தை போற்றும் விதமாக “வீரக்கல்” ஒன்றை நட்டு வேலுநாச்சியார் வணங்கினார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!