Contents show
பிரம்மஞான சபை, நியூயார்க் 1875
- நிறுவியவர்: மேடம் பிளவாட்ஸ்கி (இரஷ்யா) & ஹென்றி எஸ் ஆல்காட் (அமெரிக்கா).
- தலைமையிடம்: பேலூர், கொல்கத்தா.
- ‘தியோஸ்’ என்றால் ‘கடவுள்’ என்றும் ‘சோபாஸ்’ என்றால் ‘அறிவு’ என்றும் பொருள்படும். ஆகவே, ‘தியோசோபி’ என்றால் ‘கடவுளைப்பற்றிய அறிவு’ என்று பொருள்படும்.
- இவ்வமைப்புப் பின்னர் 1886 இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.
- பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
- இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது.
- திருமதி. அன்னிபெசன்ட் அவர்கள் 1907 ஆம் ஆண்டு இச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்று, இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
- இவரால் பனாரசில் (காசி) தோற்றுவிக்கப்பட்ட மத்திய இந்துக் கல்லூரி இறுதியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மதன் மோகன் மாளவியால் வளர்ச்சி அடைந்தது.
- பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்கள் செய்தித்தாளை நடத்தி வந்தார்
- நியூ இந்தியா (New India)
- காமன்வீல் (Common Weal)
- அரசியலில்தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இந்தியர்கள் சுயாட்சி பெறுவதற்காக தன்னாட்சி இயக்கத்தை 1916ல் (Home Rule Movement) உருவாக்கினார்.