நிறுவியவர்: மேடம் பிளவாட்ஸ்கி (இரஷ்யா) & ஹென்றி எஸ் ஆல்காட் (அமெரிக்கா).
தலைமையிடம்: பேலூர், கொல்கத்தா.
‘தியோஸ்’ என்றால் ‘கடவுள்’ என்றும் ‘சோபாஸ்’ என்றால் ‘அறிவு’ என்றும் பொருள்படும். ஆகவே, ‘தியோசோபி’ என்றால் ‘கடவுளைப்பற்றிய அறிவு’ என்று பொருள்படும்.
இவ்வமைப்புப் பின்னர் 1886 இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.
பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
இந்தியாவில் பௌத்தம்புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது.
திருமதி. அன்னிபெசன்ட் அவர்கள் 1907 ஆம் ஆண்டு இச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்று, இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இவரால் பனாரசில் (காசி) தோற்றுவிக்கப்பட்ட மத்திய இந்துக் கல்லூரி இறுதியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மதன் மோகன் மாளவியால் வளர்ச்சி அடைந்தது.
பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்கள் செய்தித்தாளை நடத்தி வந்தார்
நியூ இந்தியா(New India)
காமன்வீல்(Common Weal)
அரசியலில்தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இந்தியர்கள் சுயாட்சி பெறுவதற்காக தன்னாட்சி இயக்கத்தை 1916ல் (Home Rule Movement) உருவாக்கினார்.