பிரிட்டிஷ் (Vs) கூர்க்காக்கள் (1814 – 1816) & பிரிட்டிஷ் (Vs) பர்மியர்கள் (1824 – 1852)

பிரிட்டிஷ் (Vs) கூர்க்காக்கள் (1814 – 1816):

காரணம்:

  • 1768-ல் கூர்க்கா ஒரு பலம் வாய்ந்த நாடாக எழுச்சியுற்றது.
  • இதன் எல்லை திபெத், வங்காளம் மற்றும் அயோத்திவரை நீண்டிருந்தது.
  • துணைப்படைத்திட்டத்தின்மூலம் அயோத்தியின் நவாப்பிடம் இருந்து கோரக்பூர் மற்றும் பஸ்தி பகுதிகளைப் பெற்றபோது பிரிட்டிஷ் எல்லையும் கூர்க்கா எல்லையும் தொட்டுக்கொண்டது.
  • மே மாதம் 1814-ல் 18 காவலர்கள் கூர்க்காவால் கொலை செய்யப்பட்டதால் ஹாஸ்டிங் பிரபு போரை அறிவித்தார்.
  • 1814-ன் இறுதியில் நேபாள இராணுவ தலைமை தளபதி அமர்சிங் தாப்பார் சரணடைந்தார். பல தோல்விகளுக்குப்பின் கூர்க்கா படை சரணடைந்து 1816-ல் சகௌலி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
  • இவற்றின் காரணமாக ஹாஸ்டிங்ஸ், மார்குயிஸ் ஹாஸ்டிங் என அழைக்கப்பட்டார்.
  • கூர்க்காக்கள் தராய் பகுதியின் மீதான தங்களது உரிமையை விட்டுக்கொடுத்ததோடு சிக்கிமிலிருந்து வெளியேறினர்.
  • ஹுமாயூன் மற்றும் கார்வால் பகுதிகளை பிரிட்டிஷ் பெற்றனர்.

பிரிட்டிஷ் (Vs) பர்மியர்கள் (1824 – 1852):

முதல் ஆங்கிலோ பர்மியப்போர் (1824 – 1826):

  • காரணம்: 1824-ல் அஸ்ஸாமை கைப்பற்ற முயன்றதால் ஆம்ஹெஸ்ட் பிரபு போரை அறிவித்தார்.
  • 1826-ல் பர்மியர்களை தோற்கடித்து பர்மா வரை பிரிட்டிஷார் முன்னேறினர்.
  • எனவே பர்மியர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்ததினால் 1826-ல் யாண்டபூ உடன்படிக்கை மூலம் போர் முடிவுக்கு வந்தது.
  • பர்மாவின் அரக்கம் மற்றும் டெனாசரிம் எனும் மேற்குப் பகுதிகள் பிரிட்டிஷ் வசமானது.

இரண்டாம் ஆங்கிலோ பர்மியப் போர் (1852):

  • முதல் போருக்குப்பின் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட உரிமை

காரணம்:

  • வர்த்தகத்தில் ஏற்பட்ட போட்டி பர்மியர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் பகைமையை ஏற்படுத்தியது.
  • ஆங்கிலேயர்கள் தங்களை பர்மியர்கள் கீழாக நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து 1852-ல் டல்ஹெசி பிரபு போரை அறிவித்தார்.
  • பிரிட்டிஷார் வெற்றி பெற்று கீழ்பர்மா அதன் தலைநகர் பெகுவோடு கைப்பற்றப்பட்டு
  • பிரிட்டிஷ் பகுதியோடு இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதியை நிர்வாகம் செய்ய ஆர்தர் பைரே என்பவர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
  • இப்போரின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றான ரங்கூன் ஆங்கிலேயர் வசம் வந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!