இரத்தம்
- இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும்.
- மேலும் இது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் முக்கிய ஊடகமாகும்.
இரத்தத்தின் பகுதிப் பொருள்கள்
- இரத்தம் இரண்டு முக்கிய பகுதிப் பொருட்களான பிளாஸ்மா எனும் திரவப் பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கக் கூறுகளையும் (இரத்த செல்கள்) கொண்டுள்ளது.
பிளாஸ்மா
- இரத்தத்தின் 55% பிளாஸ்மா ஆகும். இது சிறிதளவு காரத்தன்மை உடையது. உயிரற்ற செல் உட்பொருட்களைக் கொண்டுள்ளது.
- கரிமப் பொருட்களான புரதங்கள், குளுக்கோஸ், யூரியா, நொதிகள், ஹார்மோன்கள், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.
இரத்தத்தின் ஆக்கக் கூறுகள்
இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.
- இரத்தச் சிவப்பணுக்கள் (RBC)(அ)எரித்ரோசைட்டுகள்
- இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்
- இரத்தத் தட்டுக்கள் (அ) திராம்போசைட்டுகள்
இரத்தச் சிவப்பணுக்கள்— எரித்ரோசைட்டுகள்
- இவை மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த எரித்ரோசைட்டுகள் செல்களாகும்.
- இவை எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.
- சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
- பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பணுவில், செல் காணப்படுவதில்லை.
- இவை இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் உடையவை. இவற்றின் வாழ்நாள் 120 நாட்கள் ஆகும்.
- RBC ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் பங்கேற்கிறது.
இரத்த வெள்ளையணுக்கள் (WBC)
- இவை நிறமற்றவை
- இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை.
- இவை எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு போன்றவற்றில் காணப்படுகின்றன. இவை அமீபா போன்று நகரக் கூடியவை.
இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
- துகள்களுடைய செல்கள்
- துகள்களற்ற செல்கள்
துகள்களுடைய செல்கள்
- இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது கதுப்புக்களுடையவை
இவை மூன்று வகைப்படும்
- நியூட்ரோஃபில்கள்
- ஈசினோஃபில்கள்
- பேசோஃபில்கள்
நியூட்ரோஃபில்கள்
- இவை அளவில் பெரியவை, இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது.
- மொத்த வெள்ளை அணுக்களில் 60% – 65% நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன.
- நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஈசினோஃபில்கள்
- இவற்றின் உட்கரு இரு கதுப்புகளைக் கொண்டது. மொத்த வெள்ளையணுக்களில் 2% 3% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
- உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
- நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கியபணிகளாகும்.
பேசோஃபில்கள்
- பேசோஃபில்கள் கதுப்புடைய உட்கருவை கொண்டுள்ளன.
- மொத்த வெள்ளையணுக்களில் 0.5% -10% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
- வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.
துகள்களற்ற செல்கள்
- இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதில்லை. இவை இரண்டு வகைப்படும்.
- லிம்ஃபோசைட்டுகள்
- மோனோசைட்டுகள்
லிம்ஃபோசைட்கள்
- மொத்த வெள்ளையணுக்களில் இவை 20% 25% உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.
மோனோசைட்டுகள்
- இவை லியூக்கோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை.
- இவை அமீபாய்டு வடிவம் கொண்டவை. மொத்த வெள்ளையணுக்களில் 5 – 6% உள்ளது. இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.
இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள்
- இவை சிறியவை மற்றும் நிறமற்றவை. இவற்றில் அளவில் உட்கரு இல்லை.
- ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2, 50,000 – 4, 00,000 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன.
- இவற்றின் வாழ்நாள் 8-10 நாட்களாகும்.
- இரத்தம் உறைதலில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. காயங்கள் ஏற்படும் பொழுது இரத்த உறைதலை ஏற்படுத்தி இரத்தப் போக்கை தடுக்கின்றன.
இரத்தத்தின் பணிகள்
- சுவாச வாயுக்களைக் (ஆக்சிஜன் மற்றும் CO2) கடத்துகிறது
- செரிமானம் அடைந்த உணவுப்பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
- ஹார்மோன்களைக் கடத்துகிறது.
- நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
- நோய்தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
- உடலின் வெப்பநிலை மற்றும் pH-ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுகிறது.
- உடலின் நீர்ச் சமநிலையைப் பாரமரிக்கிறது.