மாநில அரசில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகளை சுருக்கி எழுதுக 

ஆளுநர்

  • மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது. 
  • இந்திய குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். 

பதவிக் காலம் மற்றும் நீக்கம்

  • அவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அவரை அப்பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்கலாம், அல்லது தானாகவே தனது பதவியை ஆளுநர் ராஜினாமா செய்யலாம். 
  • ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படலாம். 
  • ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிரந்து நீக்க இயலாது.

தகுதிகள்

  • மாநில ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 
  • 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. 
  • இது தவிர ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் அவர் வகித்த கூடாது.
  • குடியரசு தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். 
  • மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். 
  • பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.

அதிகாரம் மற்றும் பணிகள்

  • ஆளுநர் ஒரு மாநிலத்தின் பெயரளவு நிர்வாகி ஆவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் உள்ளன. 
  • மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • ஆளுநர் முதலமைச்சர் ஐயும் அவரது ஆலோசனையின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
  • மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் ஏற்படுத்துகிறார்.
  • மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.மாநிலசட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
  • ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பணம் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியும். 
  • சட்டமன்றம் அல்லது சட்டமன்றத்தின் இரு அவைகள் (ஈரவை களாக இருக்கும்பொழுது) கூட்டத்தொடர் நடைபெறாதபோது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கிறார்.
  • சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாத போது நியமனம் செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளார். 
  • மாநிலச் சட்ட மேலவைக்கு அறிவியல் ,இலக்கியம் ,கலை, சமூகசேவை, கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. 
  • சட்டமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறார். 
  • மாநில அரசின் எதிர்பாராத செலவினநிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!