மின்திறன்
- வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் செலவிடப்படும் வீதம் திறன் என வரையறைச் செய்யப்படுகிறது.
- இது போல மின்னாற்றல் நுகரும் வீதம் தான் மின்திறன். மின்னாற்றல் வேறு எந்த ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகிற வீதத்தைத் தான் இது குறிக்கிறது.
- மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு மின்திறன் எனப்படும்.
- கடத்தியின் இருமுனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு V யாக இருக்கும் போது R மின்தடை கொண்ட கடத்தியின் வழியே | மின்னோட்டம் t காலத்திற்கு பாய்வதாக கொள்வோம்.
- மின்னூட்டங்களை கடத்தியின் முனைகளுக்கிடையே நகர்த்துவதற்கு செய்யப்பட்ட வேலை W = V I t
எனவே மின்திறன் = V I t / t
P = V I
குதிரை திறன்:
- குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1 குதிரை திறன் என்பது 746 வாட் ஆகும்.
மின் திறனின் அளவு
- மின் திறனின் SI அலகு வாட் ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில், ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில் செயல்படும் மின்கருவி பயன்படுத்திக் கொள்ளும் மின்திறன் ஒரு வாட் ஆகும்.
P = 1 வோல்ட் × 1 ஆம்பியர் = 1 வாட்
- நடைமுறையில் மின் திறனின் பெரிய அளவு அலகாக கிலோ வாட் பயன்படுத்தபடுகிறது.
Also Read
- Elements and Compounds / தனிமங்களும் சேர்மங்களும்
- Carbon / கார்பன்
- Nitrogen and their compounds / நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
- Fertilizer / உரங்கள்
- Pesticides / களைக்கொல்லி
- Insecticides / பூச்சிக்கொல்லி
- Blood and blood circulation / இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்கள்
- Endocrine system reproductive system / நாளமில்லா சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம்
- Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள்
- General Scientific Law / பொது அறிவியல் விதிகள்
- Heat, Light and Sound / ஒளி,ஒலி மற்றும் வெப்பம்