மீனவர்களின் பாடல்

கடலோடு விளையாடு – மீனவர்களின் பாடல்

மீனவர் தொழில் பாட்டு

சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது

தொழில் பாட்டு

  • மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அசதியைப் போக்குகிறது பாடல்.
  • உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள்.
  • வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் பாடல்

திணை – நெய்தல் **

நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்

மக்கள் – பரதவர், பரத்தியர்

தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ – தாழம்பூ **

 பாடல் * ***

விடிவெள்ளி நம் விளக்கு – ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா

அடிக்கும் அலை நம் தோழன் – ஐலசா

அருமை மேகம் நமது குடை – ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா

விண்ணின் இடி காணும் கூத்து  – ஐலசா

பாயும் புயல் நம் ஊஞ்சல் – ஐலசா

பனிமூட்டம் உடல் போர்வை – ஐலசா

காயும் கதிர்ச்சுடர் கூரை – ஐலசா

கட்டுமரம் வாழும் வீடு – ஐலசா

மின்னல் வரி அரிச்சுவடி – ஐலசா

பிடிக்கும் மீன்கள் நம் பொருள்கள் – ஐலசா

முழுநிலவே கண்ணாடி – ஐலசா

மூச்சடக்கும் நீச்சல் யோகம் – ஐலசா

தொழும் தலைவன் பெருவானம் – ஐலசா

துணிவோடு தொழில் செய்வோம் – ஐலசா

பாடலின் பொருள்

மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு

பாடம் – மின்னல் கோடுகள்

ஊஞ்சல் – புயல்

கண்ணாடி – முழு நிலவு

குடை – மேகம்

கூத்து – இடி

செல்வம் – மீன்கள்

தலைவன் – வானம்

தவம் – நீச்சல் * *

தோழன் – கடல் அலை

பஞ்சு மெத்தை – மணல்

பள்ளிக்கூடம் – விரிந்த கடல்

போர்வை – பனிமூட்டம் * *

மேற்கூரை – கதிரவனின் ஒளிச்சுடர் * *

வாழும் வீடு – கட்டுமரம் * *

விளக்குகள் – விண்மீன்கள் **

இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

சொல்லும் பொருளும்

கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

மின்னல் வரி – மின்னல் கோடு

அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!