மூதுரை – கல்வியே அழியாச் செல்வம் ஒளவையார்
நீதி நூல்கள்
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின.
- நீதி நூல்கள் பதினெண் கீழக்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ன.
மூதுரை
- மூதுரை நூலின் ஆசிரியர் ஔவையார்.
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- மூதுரை நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன.
ஒளவையார்
- மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார்.
- ஒளவையார் இயற்றியுள்ள நூல்கள்
- மூதுரை
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
பாடல்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின்
கற்றோன் சிறப்புடையன்*
மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.*
-ஒளவையார்
பாடலின் பொருள்
- மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
- மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு.
- கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு
சொல்லும் பொருளும்
- மாசற – குற்றம் இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால்
- தேசம் – நாடு
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘மன்னற்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
(A) மூதுரை
(B) பழமொழி நானூறு
(C) திருக்குறள்
(D) நாலடியார்
(E) விடை தெரியவில்லை.
‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ -இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
(A) ஆத்திச்சூடி
(B) கொன்றைவேந்தன்
(C) நல்வழி
(D) மூதுரை
(E) விடை தெரியவில்லை
“எறும்பும் தன்கையில் எண் சாண்” – எனப்பாடியவர்
(A) கபிலர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) ஒளவையார்
(D) புகழேந்தி
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————