Contents show
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
- மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்.
- தமிழ்ச் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் தேவநேயப் பாவாணர்.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர் தேவநேயப் பாவாணர்.
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர்.
- தேவநேயப் பாவாணர் பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் ஆவார்.
- சொல் ஆய்வுக் கட்டுரைகள் நூலை எழுதியவர் தேவநேயப் பாவாணர்.
- தேவநேயப் பாவாணரின் நூல்கள் பாடப்பகுதியில் உள்ளவை
தமிழ்ச் சொல் வளம் – சொல் ஆய்வுக் கட்டுரைகள்
தமிழ்ச் சொல் வளம் – சொல் ஆய்வுக் கட்டுரைகள் – தேவநேய்ப் பாவாணர்
- தமிழ்ச் சொல் வளம் நூலின் ஆசிரியர் தேவநேய்ப் பாவாணர்.
- தமிழ்ச் சொல் வளம் நூலின் ஆதார நூல் சொல்லாய்வுக் கட்டுரைகள்.
- சொல் ஆய்வுக் கட்டுரைகள் நூலின் ஆசிரியர் தேவநேய்ப் பாவாணர்.
- தமிழ்ச் சொல் வளம் நூலின் மைய கருத்து
- பயிர் வகைச் சொற்கள் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
- பல துறைகளிலும் காணப்படும் தமிழின் சொல் வளத்தை கூறுகிறது
தமிழின் சிறப்புகள்
- கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
- என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பலவேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இயங்குகின்றது.
தேவநேயப் பாவாணரின் சொல் ஆய்வு மதிப்பீடு
- ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.
- நாட்டின் தனிப்பெரும் வளத்தினால் மட்டுமே. பண்டைய தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்தனர் என அறிக.
- திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியே.
- மொழியே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தோரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு சிறந்த வழியாகும்.
- பொருளைக் நுண் பாகுபாடு செய்து அவற்றிற்கு பருப்பொருட் சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக் கொள்வது. சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்களுக்கே இயலும்.