ரயத்வாரி முறை (1820) & மகல்வாரி முறை (1833)

ரயத்தவாரி முறை (1820)

  • இத்திட்டம் சென்னை மாகாணத்தில் தாமஸ் முன்றோ மற்றும் கேப்டன் ரீடு என்பவரால் கொண்டுவரப்பட்டு பின் பம்பாய், அஸ்ஸாம், குடகு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • பிரிட்டிஸ் இந்திய பகுதிகளில் 51% நிலங்களில் இம்முறை செயல்பட்டது.

பண்புகள்

  • நிலத்தின் உரிமையாளர்களாக விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர்.
  • வரியானது விவசாயிகளிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டது.
  • விளைச்சலில் பாதியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு பின்பு 3-ல் 1 பங்கு மாற்றப்பட்டது. என
  • நிலத்தின் மீதான குத்தகை 20 அல்லது 30 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது.
  • நிலத்தின் தன்மை மற்றும் பயிரின் தன்மைக்கு ஏற்ப, நிலவருவாய் தீர்மானிக்கப்பட்டது.

நன்மைகள்

  • விவசாயிகள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தனர்.
  • நில வருவாய் வரியாக அல்லாமல் குத்தகையாக பெறப்பட்டது.

தீமைகள்:

  • பல பகுதிகளில் வருவாயானது மிக அதிகமாக இருந்தது.
  • வருவாய் வசூலிக்க கடுமையான முறைகளை ஆங்கிலேய அதிகாரிகள் பின்பற்றினர்.

மகல்வாரி (1833)

  • இம்முறை கங்கை சமவெளிகளில் 1822ல் ஹோல்ட் மெகன்சி என்பவரால் கொண்டு வரப்பட்டது. இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இராபர்ட் மார்டின் பர்ட்ஸ் என்பரின் உதவியோடு 1833ல் வில்லியம் பெண்டிங் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தினார்.
  • பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளில் 30% நிலங்களில் இம்முறை செயல்படுத்தப்பட்டது.
  • முதலில் ஆக்ரா, அயோத்தியிலும் பின்பு மத்திய மாகாணத்திற்கும் இம்முறை விரிவுபடுத்தப்பட்டது.

பண்புகள்:

  • கிராமத் தலைவர் அல்லது லம்பாதார் என்பவர் கிராமங்களுக்கான வருவாயை அரசிடம் செலுத்துவார்.
  • அனைத்து விவசாயிகளும் வரி செலுத்த கடமைப்பட்டனர்
  • *விளைச்சலில் 2/3 பங்காக இருந்த வரியை 50 சதவீதமாக பெண்டிங் பிரபு குறைத்தார்.

நன்மைகள்

  • கிராம வாரியாக நில அளவை எடுக்கப்பட்டு வரி வசூலிக்கப்பட்டது.
  • இம்முறை மூலம் பாசன முறை மேம்பாடு அடைந்தது.

தீமைகள்

  • கிராம தலைவர்கள் ஜமீன்தார் போன்று செயல்பட்டனர்.
  • கிராமத்தின் உயர்வகுப்பினர் இதன்மூலம் இலாபம் அடைந்தனர்.
  • விவசாயிகளுக்கு இம்முறை மூலம் இலாபம் ஏதும் கிடைக்கவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!