பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம்மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
சீர்திருத்த இயக்கங்கள்
பிரம்ம சமாஜம்
பிரார்த்தனை சமாஜம்
அலிகார் இயக்கம்.
புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள்
ஆரியசமாஜம்
ராமகிருஷ்ணா மிஷன்
தியோபந்த் இயக்கம்
ராஜா ராம்மோகன் ராய் (1772-1833),
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இவர் அராபிக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றார். பின்னர் பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரூ போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில்1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
பிரம்ம சமாஜம் 1828
1815 ஆம் ஆண்டு ஆத்மீய சபாவைத் தோற்றுவித்தார். இதுவே பின்னர், 1828ஆம் ஆண்டு முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
‘ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ‘பொது சமயத்தில்’ நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்ம சமாஜம் இருந்தது.
ராஜா ராம்மோகன் ராயின் சகோதரர் ஜெகன்மோகன்ராய் காலமானதால் அவரது மனைவியும் எரிக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே சதி பழக்கத்திற்கு எதிராக பல கூட்டங்களை நடத்தினார். இவருக்கு ராதாகந்த் தேப் மாற்றும் பவானி சரண் பானர்ஜி போன்றோரும் உதவினர்.
இவரது சீரிய முயற்சியினால் 1829ஆம் ஆண்டு ஆங்கிலத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு‘சதி தடை சட்டத்தை’ கொண்டுவந்தார்.
இராஜாராம் மோகன்ராய் நூல்கள்
‘ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்’ (Precepts of Jesus Christ)
‘அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி’ (The Guide to Peace and Happiness)
கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்பொருக்குமிடையே நடைபெற்ற விவாதம் – எனும் கட்டுரையை எழுதினார்.
முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்திப் பெற இங்கிலாந்து சென்றார். இவர் 1833 ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்றும் இடத்தில் இறந்தார்.
இவருக்கு முகலாய மன்னர் ‘இராஜா‘ என்ற பட்டத்தை வழங்கினார்.
இவர் புதிய யுகத்தின் அறிவிப்பாளர் என்று அழைக்கப்பட்டார் (Herald of New age in India).
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
ராஜா ராம்மோகன் ராய் 1833 இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார்.
சமாஜத்தில் பிளவு
தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர்.
அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திர சென் இவர் 1857 இல் சபையில் இணைந்தார்.
கேசவ் சந்திரசென் முயற்சியால் 1872 ஆம் ஆண்டு, பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
“எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே” எனக் கேசவ் சந்திர சென் கூறினார்.
1886 இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி ‘இந்திய பிரம்ம சமாஜம்’ புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்.
குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும்அமைப்பை நிறுவினர்.
இதன்பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைக்கப்படலாயிற்று.
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜம்
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசிவிஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்க ‘பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்.
கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார்.
1864 இல் இதே நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.