ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி & ராஜாஜி திட்டம்

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி

  • B.C.தத் என்பவர் HMIS தல்வார் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.
  • தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18 இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது.
  • 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர்.
  • கராச்சியின் HMIS ஹிந்துஸ்தான் மற்றும் கராச்சியின் மற்ற கடற்படைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுன. 
  • 78 கப்பல்களின் 20,000 க்கும் மேற்பட்ட கடற்படை உள்ளடக்கிய மற்ற நிலையங்களுக்கும் இது விரைவில் பரவியது.
  • கடற்படை மாலுமிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கொடிகளை ஏற்றினர்.
  • பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசோர் மற்றும் ஆம்ப்லா ஆகிய இந்திய விமானப்படை நிலையம் மற்றும் ஜபல்பூரில் உள்ள இந்திய சிக்னல் கார்ப்ஸ் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
  • பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவில் உள்ள தொழிற்சங்கங்கள் அனுதாப வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால் இரு நகரங்களும் போர்க்களமாக மாறியது.
  • பிரிட்டிஷ் அரசு கிளர்ச்சியை அடக்குவதற்கு மிருகத்தனமான வழிமுறைகளை கையாண்டது.
  • அப்போது பம்பாயில் இருந்த சர்தார் வல்லபாய் படேல், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி எடுத்தார்.
  • அனைத்து அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர், காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

ராஜாஜி திட்டம்

    • தனி தேசத்திற்கான கோரிக்கை, வகுப்புவாத சவால் நீடித்தது மேலும் முஸ்லீம் லீக் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தியது.
    • முகமது அலி ஜின்னா முஸ்லீம் சமூகத்தின் ஒரே குரலாக தன்னை நிறுவிக்கொள்ள முயன்றார்.
    • சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காந்தி, ஜூலை 1944ல், ஜின்னாவுடன் ராஜாஜி திட்டம் அடிப்படையில் பேச்சு வார்த்தைகளை முன்மொழிந்தார்.

ராஜாஜியின் முன்மொழிவுகள்

  • போருக்கு பின் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களை வரையறுப்பதோடு அம்மாவட்ட மக்கள் பாகிஸ்தானை விரும்புவார்களா என்பதைக் கண்டறிய வயது வந்தோருக்கான வாக்கெடுப்பு நடத்துவது.
  • பிரிவினை ஏற்பட்டால், பாதுகாப்பு அல்லது தகவல் தொடர்பு போன்ற சில அத்தியாவசிய சேவைகளை இயக்க பரஸ்பர ஒப்பந்தம்.
  • எல்லை மாவட்டங்கள் இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்;
  • முழு அதிகாரப் பரிமாற்றம் முடியும் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முன்மொழிவு தோல்வியடைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!