வளர்தமிழ்

வளர்தமிழ்

  • உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகள்

மொழி

  • மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி.
  • மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி
  • உலகில் (ஆறாயிரத்திற்கும்) 6000 மேற்பட்ட மொழிகள் உள்ளன.

சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள்

  • தமிழ் – தொல்காப்பியம்
  • தமிழன் – திருத்தாண்டகம். அப்பர் தேவாரம்
  • தமிழ்நாடு – சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்
  • தமிழென் கிளவியும் அதனோரற்றே – தொல்காப்பியம்
  • தமிழன் கண்டாய் – திருத்தாண்டகம், அப்பர் தேவாரம்
  • இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் – சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்

தமிழ் மொழி

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார் பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்.
  • மூத்தமொழி என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.

தமிழ் எழுத்துக்கள்

  • தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
  • எ.கா – வலஞ்சுழி எழுத்துகள் – அ. எ, ஔ, ண, ஞ
  • இடஞ்சுழி எழுத்துகள் – ட.ய.ழ

தமிழ் இலக்கியங்கள்

  • தமிழ் இலக்கியங்கள் சொல் இனிமை, பொருள் இனிமை, ஓசை இனிமை கொண்டவை.
  • இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.

வளர் மொழி

  • தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
  • எண்ணத்தை வெளிப்படுத்துவது – இயல் தமிழ்
  • உள்ளத்தை மகிழ்விப்பது – இசைத்தமிழ்
  • உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவது – நாடகத்தமிழ்.

தமிழ்க் கவிதை வடிவங்கள்

  • துளிப்பா
  • செய்யுள்
  • கவிதை
  • புதுக்கவிதை

தமிழ் உரைநடை வடிவங்கள்

  • கட்டுரை புதினம்
  • சிறுகதை

கணினித்தமிழ்

  • மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • தொல்காப்பியம். நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.

தாவர இலைப் பெயர்கள்

  • நெல், வரகு – தாள்
  • சப்பாத்திக் கள்ளி, தாழை – மடல்
  • கரும்பு, நாணல் – தோகை
  • கமுகு (பாக்கு) – கூந்தல்
  • ஆல், அரசு, மா, பலா, வாழை – இலை 
  • அகத்தி, பசலை, முருங்கை – கீரை
  • அருகு, கோரை – புல்
  • மல்லி – தழை
  • பனை, தென்னை – ஓலை

தமிழ் எண்களை அறிவோம்

  • 1 – க 
  • 2 – ௨ 
  • 3 – ௩
  • 4 – ச 
  • 5 – ரு 
  • 6 – ௬ 
  • 7 – எ 
  • 8 – அ 
  • 9 – ௯
  • 10 – ௰

இரண்டாயிரம் 2000 ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்

சொல் – இடம்பெற்ற நூல்

  • உழவர் – நற்றிணை
  • அரசு – திருக்குறள்
  • கோடை – அகநானூறு
  • வெள்ளம் – பதிற்றுப்பத்து
  • பார் – பெரும்பாணாற்றுப்படை
  • உலகம் – தொல்காப்பியம்,கிளவியாக்கம், திருமுருகாற்றுப்படை
  • மருந்து – அகநானூறு, திருக்குறள்
  • வேளாண்மை – கலித்தொகை, திருக்குறள்
  • பாம்பு – குறுந்தொகை
  • முதலை – குறுந்தொகை
  • செய் – குறுந்தொகை
  • அன்பு – தொல்காப்பியம், களவியல், திருக்குறள்
  • மகிழ்ச்சி – தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்
  • உயிர் – தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்
  • ஒழி – தொல்காப்பியம், கிளவியாக்கம்
  • புகழ் – தொல்காப்பியம், வேற்றுமையியல்
  • முடி – தொல்காப்பியம், வினையியல்
  • ஊர் – தொல்காப்பியம், அகத்திணையியல்
  • செல் – தொல்காப்பியம், புறத்திணையியல்

சீர்மை மொழி

  • சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
  • தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் குறிப்பிடத்தக்கது அதன் சொற்சிறப்பு.
  • உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
  • ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
  • பாகற்காய் கசப்புச்சுவை உடையது.
  • அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல். இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!