- தமிழகத்தின் வேர்டஸ்வர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
- வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்கின்ற எத்திராசலு ஆகும்.
வாணிதாசனின் சிறப்புப்பெயர்கள்
- கவிஞரேறு
- பாவலர் மணி
- வாணிதாசன் எழுதியுள்ள நூல்கள்
- தமிழச்சி
- குழந்தை இலக்கியம்
- எழிலோவியம்
- கொடி முல்லை
- தொடு வானம்
- வாணிதாசனுக்குப் செவாலியர் விருது பிரெஞ்சு அரசு வழங்கியுள்ளது.
- வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர்.
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் வாணிதாசன். வாணிதாசனின் தொடுவானம் என்னும் நூலில் பாடப்குதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் உள்ளது.
ஓடை – வாணிதாசன்
- நெடுவானம் நூலில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது
- மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப் பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வாறு மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்!
- நெல் குத்தும் போது பாடப்படும் பாடல் – வள்ளைப் பாட்டு.
கவிதை
ஓடை ஆட
உள்ளம் தூண்டுதே! – கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் (ஓடை)
ஆட பாட இந்த ஓடை எந்தப் பள்ளி சென்று பயின்றதோடி!
ஏடு போதா இதன் (ஓடை) கவிக்கார் ஈடு செய்யப் போராரோடி! ***
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி – நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் (ஓடை)
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண – நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச் ***
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் (ஓடை) ஆட *
-வாணிதாசன்
சொல்லும் பொருளும்
- தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
- பயிலுதல் – படித்தல்
- ஈரம் – இரக்கம்
- வெட்கம் – நாணம்
- முழவு – இசைக் கருவி
- நன் செய் – நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன் செய் – குறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- செஞ்சொல் – திருந்திய சொல்
- வள்ளைப் பாட்டு – நெல் குத்தும் போது பாடப்படும் பாடல்
முந்தைய ஆண்டு வினாக்கள்
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என அழைக்கப்படுபவர் (5 Times Asked)
(A) கம்பதாசன்
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
(A) முடியரசன்
(B) வாணிதாசன்
(C) சுரதா
(D) மோகனரங்கன்
பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருதினைப் பெற்றவர்
(A) பாரதிதாசன்
(B) வாணிதாசன்
(C) முடியரசன்
(D) சுரதா
‘தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி’ என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) முடியரசன்
எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
(A) நா. காமராசன்
(B) தாராபாரதி
(C) அப்துல் ரகுமான்
(D) வாணிதாசன்