வேலையின்மை வரையறு. வேலையின்மையின் வகைகளை சுருக்கமாக எழுதுக

வேலையின்மை

  • வேலையின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும்

வேலையின்மையின் வகைகள்

  • வேலைவாய்ப்பைத் தீவிரமாகத் தேடும் ஒரு நபருக்கு வேலை கிடைக்காத போது வேலையின்மை ஏற்படுகிறது.
  • வேலையின்மை பெரும்பாலும் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு அளவீடாக பயன்படுத்தப்படுகிறது.
    1. மறைமுக வேலையின்மை
    2. பருவகால வேலையின்மை
    3. அமைப்பு சார் வேலையின்மை
    4. சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை
    5. தொழில்நுட்ப வேலையின்மை
    6. பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக வேலையின்மை
    7. பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு

மறைமுக வேலையின்மை:

  • தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மை ஆகும்.
  • இந்தியாவில் விவசாயம் மற்றும் அமைப்புசாரா துறைகளில் இவ்வேலை வாய்ப்பின்மை காணப்படுகிறது.

பருவகால வேலையின்மை:

  • ஆண்டின் சில பருவங்களில் மட்டும் நிகழ்கிறது.
  • (உ.தா) இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பது அரிதாகும்.

அமைப்பு சார் வேலையின்மை:

  • சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்பு சார் வேலையின்மை உருவாகிறது.
  • ஒரு பொருளுக்கான தேவைக் குறைதல் அல்லது பிற பொருட்களின் தேவை அதிகரித்தல்,
  • இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இதற்கு காரணமாகிறது.

சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை:

  • கீழ்நோக்கியப் பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மை.
  • பொருளாதார மந்தநிலையின் போது வேலையின்மை உயர்கிறது, மேலும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் இது குறைகிறது.

தொழில்நுட்ப வேலையின்மை:

  • தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலை இழப்பு.
  • 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் இயந்திரமயமாதலால் அச்சுறுத்தப்படும் வேலைகளின் விகிதம் ஆண்டுக்கு 69% என்று உலக வங்கி கணித்துள்ளது.

பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக வேலையின்மை:

  • ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது அந்த இடைவெளியில் வேலையின்மை ஏற்படுகிறது.

பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு

  • முறையான வேலை ஒப்பந்தங்கள் இல்லாமல் முறைசாரா தொழிலில் ஈடுபடும் மக்களை இது குறிப்பிடுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!