ஜிகா வைரஸ் பற்றியும் அதன் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் விவரி 

ஜிகா வைரஸ்:

  • ஜிகா வைரஸ், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில், ஏடிஸ் இனத்திலிருந்து, முக்கியமாக ஏடிஸ் எஜிப்தியிலிருந்து பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதால் பரவும் வைரஸ் ஆகும்.
  • ஏடிஸ் கொசுவானது பொதுவாக பகலில் கடிக்கின்றன, அதிகாலை மற்றும் பிற்பகல்/மாலையில் அதிகம் கடிக்கிறது.
  • டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது.

பரவல்

  • ஜிகா வைரஸ் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து கருவுக்கு பரவுகிறது.
  • பாலியல் தொடர்பின் மூலமும், இரத்தம் (ம) இரத்தம் சார்ந்த பொருட்கள் பரிமாற்றுவதன் மூலமும் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினாலும் பரவுகிறது.

ஜிகா வைரஸ் நோயின் சிக்கல்கள்:

  • கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் புதிதாக பிறக்கும் குழந்தைக்கு அசாதாரண குறைபாடு, சிறிய தலையுடைய பிறப்பு போன்றவற்றிற்கு காரணமாகிறது.
  • கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் கரு களைப்பு, குறைபிரசவம் மற்றும் பிரசவத்தின் போது சில கர்ப்ப கால சிக்கல்களுக்கு காரணமாகிறது.

தடுப்பு மற்றும் கட்டுப்பாடு:

  • ஜிகா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசி இன்னும்
  • கண்டறியப்படவில்லை.
  • ஜிகா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கையாக பகல் மற்றும் மாலை நேரங்களில் கொசு கடிப்பதிலிருந்து பாதுகாத்தல்.
  • கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் குறைக்க உள்ளூர் அரசு மற்றும் பொது சுகாதார திட்டங்களை சமூக ஒற்றுமையுடன் சேர்ந்து ஆதரிப்பது அவசியமாகும்.

 

2 thoughts on “ஜிகா வைரஸ் பற்றியும் அதன் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் விவரி ”

  1. எல்லா விடைகளுமே மிக சுருக்கமாக இருக்கிறது. விடைகளை பெரிதுபடுத்தி, மேலும் நிறைய Pointsகளுடன் ஒரு 15 மதிப்பெண் விடை அளவில் அல்லது 30 மதிப்பெண் விடை அளவில் தந்தால் பயிற்சி பெற வசதியாக இருக்கும். 🙏

    1. நிச்சயம் சிறப்பாக செய்வோம்.
      கேள்விகளின் தன்மை பொருத்து அதன் அளவு இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!