சட்டசபை
- ஒவ்வொரு மாநிலத்திலும், பொதுவாக சட்டத்துறை என்பது சட்டசபை என பொருள்படும்.
- மேலவையுள்ள மாநிலத்தில் கூட இதே நிலைதான்.
- தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது.
அமைப்பு
- அரசியலமைப்பின் விதி 170-க்கிணங்க, ஒரு மாநில சட்டசபை 500-க்கு மிகாமலும் 50-க்கு குறையாமலும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்.
- எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.
- இதில் 234 உறுப்பினர்களை வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்றுமுள்ள ஒரு உறுப்பினர் ஆங்கிலோ-இந்திய இனத்திலிருந்து ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
- இருப்பினும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர்களுக்காக அவையில் இடங்கள் ஒதுக்கப்படும்.
தகுதிகள்
- சட்டசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- அவர் 25 வயது அடைந்திருக்க வேண்டும். மற்றும்
- பாராளுமன்றச் சட்டத்தால் வரையறை செய்யப்பட்ட மற்ற தகுதிகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும்.
பதவிக்காலம்
- இயல்பாகவே, சட்டசபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
- ஆனால், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்பது விதிவிலக்காகும்.
- இருப்பினும், விதி 356-ன்படி மாநில அவசரநிலை என்று அழைக்கப்படுகின்ற ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தும் ஆணையின் விளைவாக, எந்த நேரமும் ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படலாம்.
- விதி 352-ன்படி தேசிய அவசரநிலையின் காரணமாக, சட்டசபையின் பதவிக்காலம் பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் அது ஒரு வருடத்திற்கு மிகக் கூடாது.
- இருப்பினும், அவசரநிலைப் பிரகடனம் வாபஸ் பெற்றபிறகு ஆறு மாதத்திற்குள் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும். இவைதவிர, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை செய்வதற்கு, ஆளுநரிடம் முதலமைச்சர் தானாக முன்வரலாம்.
அதிகாரங்களும், பணிகளும்
- தமிழ்நாட்டில் சட்டசபை பல்வேறு பணிகளைச் செய்கின்ற ஒரு அரசியல் நிறுவனமாக உள்ளது.
- அரசியலமைப்பால் விதிக்கப்பட்ட வரையரைகளைத்தவிர, மாநில அட்டவணை மற்றும் பொது அட்டவணை ஆகியவற்றின் எந்தப் பிரிவிலும் சட்டம் இயற்றுதல்.
- அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் ஒழித்தல்.
- மாநிலத்தின் நிதிகளைக் கட்டுப்படுத்துதல்.
- பண மசோதாக்களை அறிமுகப்படுத்தி அவைகளை நிறைவேற்றுதல்.
- பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்த ஒப்புதலுக்காக வந்தால் அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது மறுத்தல்.
- தமிழ்நாடு பொதுப்பணி ஆணையம், மசோதா பொதுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் மற்றும் பிறரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளைப் பரிசீலித்தல்.
- பல்வேறு நடவடிக்கைகளுக்கான பல்வேறு குழுக்களை அமைத்தல்
- சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுத்தல்.
- ஆளுகின்ற அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருதல். மற்றும்
- இந்திய ஜனாதிபதியின் தேர்தலில் பங்கேற்றல்.
சட்டசபை உறுப்பினர்கள் (M.L.A) மேலவை உறுப்பினர்களைவிட (M.L.C) அதிக அதிகாரங்களும் பணிகளும் பெற்றுள்ளனர்.
- சட்டத்துறையின் மற்ற முக்கிய அலுவலர்கள் தொடர்பாக சட்டசபை அதன் சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுக்கிறது.
- இதேபோல, மேலவை அதன் தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞரைப் போல, மாநில தலைமை வழக்கறிஞர் சட்டத்துறையின் உறுப்பினராக இல்லாமல் சட்டத்துறை நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையையும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.