அரபியர், துருக்கியரின் வருகை

அரபியரின் வருகை : பின்னணி

 • இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர்.
 • இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்) கிழக்குக் (கோரமண்டல் / சோழமண்டல்) கடற்கரைகளில் குடியேறினர்.
 • மலபார் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர்,          மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர்.

ஹிந்த்

 • அரபியரும் ஈரானியரும் இந்தியாவை ஹிந்த் என்றும், இந்தியர்களை ஹிந்துக்கள் என்றும் குறிப்பிட்டனர்.
 • அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், பர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தினார்.
 • இந்தப் போரில் ஒரு முழுமையான வெற்றியை பிருத்விராஜ் பெற்றார்.
 • பிருத்விராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக, அடுத்த ஆண்டில் (1192) முகமது கோரி அஜ்மீர் மீது படையெடுத்தார்.
 • இரண்டாவது தரெய்ன் போரில்,பிருத்விராஜ் தோல்வி அடைந்தார்.
 • தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக முகமது கோரி நியமித்தார்.
 • கன்னோசி அரசர் ஜெயசந்திரரை எதிர்த்துப் போர்புரிய மீண்டும் விரைவிலேயே முகமது கோரி இந்தியா வந்தார்.
 • ஜெயசந்திராவை எளிதாக வென்ற முகமது கோரி, ஏராளமான கொள்ளைச் செல்வத்துடன் திரும்பினார்.

வடஇந்தியாவின் முக்கிய அரச வம்சங்கள்:

 • டோமர் (தில்லி)
 • சௌகான் (ராஜஸ்தான்)
 • சோலங்கி (குஜராத்)
 • பரமர் (மால்வா)
 • கடவாலா (கன்னோசி)
 • சந்தேலர் (பந்தல்கண்ட்)
 • துருக்கிய குதிரைப் படை, இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாயிருந்தது.
 • ராஜபுத்திரப் படை யானைகளுடன் மையப்படுத்தி இருந்தது.
 • யானைகளுடன் ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை.
 • இது போரில், துருக்கியர்களுக்குச் சாதகமாக அமைந்தது.
 • 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

சான்றுகள்

 • அல்பெருனி: தாரிக்அல்ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
 • மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
 • ஜியாவுத்தின் பாரனி: தாரிக்பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.
 • அமிர் குஸ்ரு : மிஃப்தா உல்ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்);
 • கஜைன் : உல்ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் – பாரசீக மொழியில்)
 • துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
 • சம்ஸ்சிராஜ் அஃபிஃப்: தாரிக் இஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது).
 • குலாம் யாஹ்யாபின் அஹ்மத்: தாரிக்முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
 • ஃபெரிஷ்டா: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!