ஆப்கன் போர் (1836 – 1919) & சீக்கியப்போர் (1845 – 1849)

பிரிட்டிஷ் (Vs) ஆப்கானிஸ்தான் (1836 – 1919):

முதல் ஆங்கிலோ ஆப்கன் போர் (1836 – 1842):

காரணம்:

  • ஆப்கானில் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் பிரிட்டிஷின் தலையீடு போரை ஏற்படுத்தியது.

நபர்கள்:

  • தோஸ்து முகமது (Vs) ஷா சுஜா (ஆப்கானிஸ்தான்)  அக்லாந்து பிரபு (பிரிட்டிஷ்)  ரஞ்சித்சிங் (பஞ்சாப்)
  • ஷா சுஜா, அக்லாந்து மற்றும் ரஞ்சித் சிங் ஆகிய மூவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
  • இதன்படி, ஒருவருக்கொருவர் உதவிசெய்வதோடு ரஷ்யா மற்றும் ஈரானுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளவும் ஒப்புக்கொண்டனர்.
  • பிரிட்டிஷ் படை ஆப்கானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது. மேலும் 1839-ல் தோஸ்து முகமது சரணடைந்தார். அவர் கல்கத்தாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
  • ஷா சுஜா அரசராக பதவியேற்றாலும் அவரை மக்கள் துரோகியாக பார்த்தனர். 1842-ல் சிராஜ்-உத்-தௌலாவின் கிளர்ச்சி படை ஷாகஜா-வை கொலை செய்தனர்.
  • இக்கிளர்ச்சியின் விளைவாக ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்களும் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டனர். எனவே அமைதி உடன்படிக்கை ஏற்படுத்த பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்டது.
  • அக்லாந்து பிரபு இங்கிலாந்திற்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டார். மேலும் புதிய தலைமை ஆளுநர் எல்லன்பரோ பிரபு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
  • விளைவாக தோஸ்த் முகமது மீண்டும் அரியணை ஏறினார்.

இரண்டாம் ஆங்கிலோ ஆப்கானியப் போர் (1878-1880):

காரணம்:

  • ரஸ்யாவின் தூதர்குழு ஆப்கானிற்கு வந்ததால் ரஸ்யா ஆப்கானுடன் இணைந்து இந்தியாமீது போர்தொடுக்க போவதாக தவறாக எண்ணியதால் போர் ஏற்பட்டது.
  • இந்திய வைஸ்ராய் லிட்டன் பிரவுவிற்கு போர் செய்ய அரசு அனுமதி அளித்தது.
  • பிரிட்டிஷ் விரைவில் கந்தகார் மற்றும் காபுல் இடையேயான பகுதிகளை கைப்பற்றியது.
  • தோஸ்து முகமதுவின் மகன் அரசர் ஷேர் அலி 1879-ல் தப்பியோடி பின் மரணமடைந்தார்.
  • ஷேர் அலியின் மகன் யாகூப்கான் அரசராக்கப்பட்டு கண்டாமக் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.
  • இவ்வுடன்படிக்கையின்படி காபூலில் ஒரு பிரிட்டிஷ் தூதர் அவையில் இருக்க வேண்டும் என்பதால் தூதர் ஒருவர் அனுப்பப்பட்டார். ஆனால் அவரோடு சேர்ந்து பல பிரிட்டிஷ் வீரர்கள் கிளர்ச்சிக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • மீண்டும் போர் துவங்கியது, யாகூப்கான் சரணடைந்தார். அவர் தேராதூனிற்கு சிறைக்கைதியாக கொண்டு செல்லப்பட்டார்.
  • தோஸ்த் முகமதுவின் பேரன் அப்துர் ரகுமான் அரசராக்கப்பட்டார்.
  • ஆப்கானை கைப்பற்றினாலும் அதை பிரிட்டிஷாரால் நிலைப்படுத்த இயலவில்லை.
  • லிட்டனின் ஆப்கான் கொள்கை விமர்சிக்கப்பட்டு 1880-ல் அவர் வேலையிலிருந்து வற்புறுத்தி விடுவிக்கப்பட்டார்.

மூன்றாம் ஆங்கிலோ ஆப்கானியப் போர் (1919):

காரணம்:

  • 1917-ல் ஆப்கானியர்கள் வற்புறுத்தியதால் போர் மூண்டது. முழுச்சுதந்திரம் வேண்டுமென பிரிட்டிஷிடம்
  • அப்துல் ரகுமானின் மகன் ஹபிபுல்லா கொலை செய்யப்பட்டதால் அவரின் சகோதரர் நஸ்குல்லாவிற்கும் மகன் அமனுல்லவிற்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது.
  • தனது செல்வாக்கை கூட்ட அமனுல்லா இந்தியாவின் பாக் பகுதியை கைப்பற்றினார். இதனால் 1919-ல் பிரிட்டிஷ் போர் அறிவித்தது.
  • ஆகஸ்டு 8, 1919-ல் ராவல்பிண்டி உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
  • ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் அடைந்ததோடு அதன் இந்திய எல்லையை பிரிக்கும் “துராண்டு (DurandlLine)” எல்லைக்கோட்டை பிரிட்டிஷ் ஏற்றுக்கொண்டது.

பிரிட்டிஷ் (Vs) சீக்கியர்கள் (1845 – 1849):

மஹாராஜா ரஜ்சித் சிங்:

  • சுகெர்சேலா மிஸில் கூட்டமைப்பைச் சேர்ந்த இவர் 12 சீக்கிய மிஸில்களை இணைத்து 1801-ல் மஹாராஜாவாக அறிவித்துக்கொண்டார்.
  • இவர் ஆப்கானிஸ்தானின் L160 பகுதிகளை கைப்பற்றினார். இதனால் இவர் ஷேர்-இ-பஞ்சாப் (அல்லது) பஞ்சாபின் சிங்கம் என போற்றப்பட்டார்.
  • அக்டோபர் 25, 1831-ல் சட்லஜ் நதிக்கரையான ரூபாரில் ரஞ்சித்சிங் மற்றும் வில்லியம் பெண்டிங் பிரபுவின் முதல் சந்திப்பு நடைபெற்றது.
  • சட்லஜ் நதியை வர்த்தகத்திற்கு பிரிட்டிஷார் பயன்படுத்த அனுமதி வழங்க 1832-ல் சிந்துநதி போக்குவரத்து உடன்படிக்கையை ஏற்படுத்தினர்.
  • தன் இறப்புவரை பிரிட்டிஷுடன் நல்ல உறவை பேணினார்.
  • லாகூரிலிருந்து வடமேற்கு இமயம்வரை தன் ஆட்சியை விரிவுபடுத்தினார்.
  • ஆப்கானின் சுஜாஷா துராணியிடமிருந்து கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றினார்.
  • அமிர்தசரசின் பொற்கோவிலை மீட்டு விரிவுபடுத்தினார்.
  • 1839-ல் ரஞ்சித்சிங்கின் இறப்பிற்கு பிறகு வாரிசு போரால் பேரரசு சிதறுண்டது.
  • சிந்தியா உடன்படிக்கையின் மூலம் சிந்துபகுதியை இணைத்த எல்லன்பரோ பஞ்சாபை கைப்பற்ற எண்ணினார். ஆனால் ஆப்கான் போரின் இழப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது.

முதல் ஆங்கிலோ சீக்கியப்போர் (1845 – 1846):

காரணம்:

  • தலைமை ஆளுநர் ஹார்டின்ஜ் பிரபு, மேஜர் பிராட்பூட் என்பவரை பஞ்சாபில் பிரிட்டிஷின் அரசியல் தூதராக நியமித்தார். 
  • இவருக்கு பஞ்சாபில் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலையை உருவாக்கி போரை தூண்ட பொறுப்பு அளிக்கப்பட்டது.
  • இவரின் செயலை எதிர்த்து தேஜ் சிங் மற்றும் குலாப்சிங் ஆகியோரின் தலைமையின்கீழ் பஞ்சாப் இராணுவம் சட்லஜ் நதியை கடந்ததைக் கொண்டு போரை அறிவித்தார் தலைமை ஆளுநர் ஹார்டின்ஜ்.
  • ஃபிராஸ்பூர் போரிலும் சோப்ரோன் போரிலும் இப்படையை தோற்கடித்து லாகூரை பிரிட்டிஷ் படை கைப்பற்றியது.
  • மார்ச் 9, 1846-ல் லாகூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுற்றது.

இரண்டாம் ஆங்கிலோ சீக்கியப்போர் (1849 – 1849);

காரணம்:

  • முதல் போருக்குபின் பல சிறு தலைவர்கள் பிரிட்டிஷிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக இப்போர் ஏற்பட்டது.

நபர்கள்

  • சீக்கியப்படைகள்: முல்தானின் முல்ராஜ், அட்டன்வாலாவின் சாட்டர் சிங்.
  • சிறுதலைவர்கள் பிரிட்டிஷாரை தாக்கியதால் 1848-ல் டல்ஹெசி பிரபு போரை அறிவித்தார்.
  • 1849-ல் அனைத்து சிறுதலைவர்களையும் அடக்கி பஞ்சாபை பிரிட்டிஷ் அரசுடன் டல்ஹௌசி இணைத்தார்.
  • பஞ்சாப் மாகாணம் தலைமை ஆணையரின்கீழ் செயல்பட்டது. மாகாணம் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு துணை ஆணையரின்கீழ் கொண்டு வரப்பட்டது.
  • லாரன்ஸ் சகோதரர்களின் உதவியுடன் டல்ஹௌசி பிரபு பஞ்சாபில் மூன்று வருடங்களில் அமைதியை ஏற்படுத்தினார்.
  • 1859-ல் ஜான்லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!