ஆப்கானில் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் பிரிட்டிஷின் தலையீடு போரை ஏற்படுத்தியது.
நபர்கள்:
தோஸ்து முகமது (Vs) ஷா சுஜா (ஆப்கானிஸ்தான்) அக்லாந்து பிரபு (பிரிட்டிஷ்) ரஞ்சித்சிங் (பஞ்சாப்)
ஷா சுஜா, அக்லாந்து மற்றும் ரஞ்சித் சிங் ஆகிய மூவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
இதன்படி, ஒருவருக்கொருவர் உதவிசெய்வதோடு ரஷ்யா மற்றும் ஈரானுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளவும் ஒப்புக்கொண்டனர்.
பிரிட்டிஷ் படை ஆப்கானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது. மேலும் 1839-ல் தோஸ்து முகமது சரணடைந்தார். அவர் கல்கத்தாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
ஷா சுஜா அரசராக பதவியேற்றாலும் அவரை மக்கள் துரோகியாக பார்த்தனர். 1842-ல் சிராஜ்-உத்-தௌலாவின் கிளர்ச்சி படை ஷாகஜா-வை கொலை செய்தனர்.
இக்கிளர்ச்சியின் விளைவாக ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்களும் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டனர். எனவே அமைதி உடன்படிக்கை ஏற்படுத்த பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்டது.
அக்லாந்து பிரபு இங்கிலாந்திற்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டார். மேலும் புதிய தலைமை ஆளுநர் எல்லன்பரோ பிரபு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
விளைவாக தோஸ்த் முகமது மீண்டும் அரியணை ஏறினார்.
இரண்டாம் ஆங்கிலோ ஆப்கானியப் போர் (1878-1880):
காரணம்:
ரஸ்யாவின் தூதர்குழு ஆப்கானிற்கு வந்ததால் ரஸ்யா ஆப்கானுடன் இணைந்து இந்தியாமீது போர்தொடுக்க போவதாக தவறாக எண்ணியதால் போர் ஏற்பட்டது.
இந்திய வைஸ்ராய் லிட்டன் பிரவுவிற்கு போர் செய்ய அரசு அனுமதி அளித்தது.
பிரிட்டிஷ் விரைவில் கந்தகார் மற்றும் காபுல் இடையேயான பகுதிகளை கைப்பற்றியது.
தோஸ்து முகமதுவின் மகன் அரசர் ஷேர் அலி 1879-ல் தப்பியோடி பின் மரணமடைந்தார்.
ஷேர் அலியின் மகன் யாகூப்கான் அரசராக்கப்பட்டு கண்டாமக் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.
இவ்வுடன்படிக்கையின்படி காபூலில் ஒரு பிரிட்டிஷ் தூதர் அவையில் இருக்க வேண்டும் என்பதால் தூதர் ஒருவர் அனுப்பப்பட்டார். ஆனால் அவரோடு சேர்ந்து பல பிரிட்டிஷ் வீரர்கள் கிளர்ச்சிக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
மீண்டும் போர் துவங்கியது, யாகூப்கான் சரணடைந்தார். அவர் தேராதூனிற்கு சிறைக்கைதியாக கொண்டு செல்லப்பட்டார்.
1839-ல் ரஞ்சித்சிங்கின் இறப்பிற்கு பிறகு வாரிசு போரால் பேரரசு சிதறுண்டது.
சிந்தியா உடன்படிக்கையின் மூலம் சிந்துபகுதியை இணைத்த எல்லன்பரோ பஞ்சாபை கைப்பற்ற எண்ணினார். ஆனால் ஆப்கான் போரின் இழப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது.
முதல் ஆங்கிலோ சீக்கியப்போர் (1845 – 1846):
காரணம்:
தலைமை ஆளுநர் ஹார்டின்ஜ் பிரபு, மேஜர் பிராட்பூட் என்பவரை பஞ்சாபில் பிரிட்டிஷின் அரசியல் தூதராக நியமித்தார்.
இவருக்கு பஞ்சாபில் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலையை உருவாக்கி போரை தூண்ட பொறுப்பு அளிக்கப்பட்டது.
இவரின் செயலை எதிர்த்து தேஜ் சிங் மற்றும் குலாப்சிங் ஆகியோரின் தலைமையின்கீழ் பஞ்சாப் இராணுவம் சட்லஜ் நதியை கடந்ததைக் கொண்டு போரை அறிவித்தார் தலைமை ஆளுநர் ஹார்டின்ஜ்.
ஃபிராஸ்பூர் போரிலும் சோப்ரோன் போரிலும் இப்படையை தோற்கடித்து லாகூரை பிரிட்டிஷ் படை கைப்பற்றியது.
மார்ச் 9, 1846-ல் லாகூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுற்றது.
இரண்டாம் ஆங்கிலோ சீக்கியப்போர் (1849 – 1849);
காரணம்:
முதல் போருக்குபின் பல சிறு தலைவர்கள் பிரிட்டிஷிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக இப்போர் ஏற்பட்டது.