இரா.பி.சேது பிள்ளை

இரா.பி.சேது பிள்ளை

  • சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் இரா.பி.சேது பிள்ளை,
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இரா.பி.சேது பிள்ளை.
  • இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல் இரா.பி.சேது பிள்ளை எழுதிய தமிழின்பம் என்னும் நூல் ஆகும்.

இரா.பி.சேது பிள்ளை எழுதியுள்ள நூல்கள்

  • தமிழகம் ஊரும் பேரும்
  • தமிழ் விருந்து
  • ஆற்றங்கரையினிலே
  • மேடைப்பேச்சு
  • கடற்கரையினிலே
  • தமிழறிஞர், வழக்குரைஞர். மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், எனப் பன்முகத் திறன் பெற்றவர் இரா.பி.சேது பிள்ளை.
  • கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த பாடப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

கப்பலோட்டிய தமிழர் (வ.உ. சிதம்பரனார்) இரா.பி.சேது பிள்ளை

  • மாலைப்பொழுது தூத்துக்குடி கடற்கரையினிலே வ.உ. சிதம்பரனார் தனது பழைய நினைவுகளை பேசுவதாக அமைந்த பாடம்
  • ஆங்கில அரசாங்கம் விதித்த சிறை வாசம் முடிந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் வ.உ. சிதம்பரனார்.

சுதேசக் கப்பல்

  • சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் பாண்டித்துரை.
  • சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் வ.உ. சிதம்பரனார்.
  • சுதேசக் கப்பல் முதல் பயணம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புத் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டது.
  • சுதேசக் கப்பல் கம்பெனியின் வேலையில் இருந்து விலகிக்கொண்டால் (நூறு) 100 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆங்கிலேயர்கள் தருவதாக கூறினர்.

வந்தே மாதரம் – திலகரும் பாரதியும்

  • வந்தே மாதரம் என்ற சுதந்திர மந்திரம் வங்க நாட்டில் பிறந்தது.
  • காட்டுக்கனல் போல் வந்தே மாதரம் என்ற சுதந்திர மந்திரம் எங்கும் பரவிற்று.
  • சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டில் மார்தட்டி நின்ற மராத்திய வீரர் பாலகங்காதர திலகர்.
  • தென்னாட்டில் தேன்றிய அஞ்சா நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர், நாவீறுடை நண்பர் பாரதியார்.
  • வந்தே மாரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்பேம் என்று பாட்டிசைத்து நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார் பாரதியார்.
  • ‘வந்தே மாதரம்’ என்றால் வந்தது தொல்லை.
  • வந்தே மாதரம் வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதியது.
  • பொதுக்கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் பேசும் போது வந்தே மாதரம் சுதந்திர மந்திரத்தை அழுத்தமாக சொல்வது வழக்கம்.

சிறை தண்டனை

  • வ.உ. சிதம்பரனாருக்கு (இரட்டை) 2 தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது.
  • அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு.
  • (ஆறு) 6 ஆண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன்.
  • சிறைச்சாலையை தவச்சாலையாக நான் கருதினேன், கை வருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய் நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.
  • ஒரு ஜெயிலர், அதிகாரத் தோரணையில் எனக்குச் சில புத்திமதிகளைச் சொன்னான்.
  • சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ?
  • கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ?

சிறைச்சாலையில் நூல்கள்

  • தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்.
  • இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்.
  • ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை நான் மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயரத்தேன்.
  • உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் அறிந்து கொள்ள மெய் அறம், மெய் அறிவு என்ற சிறு நூல்களை இயற்றினேன்.

நீதிபதி பின்ஹே கூற்று

  • சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்ப்பெற்று எழும். புரட்சி ஓங்கும்.
  • அடிமைப்பட்ட நாடு (ஐந்து) 5 நிமிடங்களில் விடுதலை பெறும் சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.

பாண்டித்துரையோடு உறவு

  • இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன்.
  • பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் பாடும் நாள் எந்நாளோ? என்று பேசிக் கடற்கறையை விட்டு அகன்றார் வீர சிதம்பரனார்.

கொற்கைத் துறைமுகம்

  • கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது.
  • கொற்கைக்கடல் முத்து வளம் கொழித்தது.
  • பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தால் வளம் பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு.
  • இன்று பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பறந்து திரிகின்றது?
  • கொள்ளை இலாபம் அடைகின்ற வெள்ளையர் கப்பலில் கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்!
  • சொந்த நாட்டிலே வந்தவருக்கு அடிமை செய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா?
  • வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?

தூத்துக்குடி துறைமுகம்

  • தென்னாட்டுத் துறைமுகமே! (தூத்துக்குடி) (முந்நூறு) 300 ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்!
  • முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே(தூத்துக்குடி துறைமுகம்) என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன். வாழ்த்துகின்றேன்.
  • தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!